பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள புதிய போட்டியாளர் யார் தெரியுமா ? அட, இவரும் விஜய் டிவி பிரபலம் தானா ?

0
479
Amir
- Advertisement -

அபிஷேக்கை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள அடுத்த வைல்டு போட்டியாளர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 50 நாட்களை கடந்துவிட்டது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

இதுவரை மொத்தம் 18 போட்டியாளர்களில் நதியா சாங் , அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி என்று 7 பேர் வெளியேறி இருக்கிறார்கள். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்று அல்லது இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த மூன்றாம் சீசனில் கூட வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு மூலம் கொண்டு வந்தனர்.

- Advertisement -

அதே போல இந்த சீசனில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டவுடன் வெளியேறிய அபிஷேக்கை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அபிஷேக் வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்டு கார்டு போட்டியாளர் நுழைந்து இருக்கிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அவரும் போட்டியாளர்களை போல டாஸ்க் காஸ்ட்டுயூமை அணிந்து இருக்கிறார்.இந்த நிலையில் , அவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இவருடைய பெயர் அமீர், நடன இயக்குனரான இவர் ஊட்டியில் Ads என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற BB ஜோடிகள் நிகழ்ச்சியில் மோகன் வைத்தியா மற்றும் பாத்திமா பாபுவின் நடன இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement