பிக் பாஸில் ஜி பி முத்து – புகைப்படத்தால் உறுதியான தகவல் – வேண்டாம் என்று கதறும் ரசிகர்கள்.

0
2877
bb
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தமிழில் 5வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியானது. மேலும், கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : நிச்சயம் வரை சென்று முறிந்த திருமணம் – விஷால் காதலிய ஞாபகம் இருக்கா ? நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசனில் டிக் டாக் புகழ் ஜி பி முத்து கலந்துகொள்ள இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் செட்டிற்கு முன் ஜி பி முத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் இந்த சீசனில் ஜி பி முத்து கலந்துகொள்வது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து டிக் டாக்கில் பிரபலமானதை விட யூடுயூபில் பிரபலமானது தான் அதிகம்.

-விளம்பரம்-

அதிலும் இவருக்கு வரும் லெட்டர்ரை படித்தே இவர் பிரபலமாகிவிட்டார். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இவர் சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் போன பெரும்பாலானோர் பெயர் டேமெஜ் ஆகி தான் வெளியில் வந்தார்கள் என்று என்பது தான் உண்மை. அதனாலேயே ஜி பி முத்துவை பிக் பாஸில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

Advertisement