நமீதா வெளியேறிய நிலையில் மிளா உள்ளேவா ? – பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து அவரே அளித்த விளக்கம்.

0
4207
mila
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மற்றொரு திருநங்கை கலந்துகொள்ள இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது.அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is shakeela.jpg

நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸின் கன்பேஷன் ரூமில் அமர்ந்து இருப்பது போல ஷகீலாவின் திருநங்கை மகள் மிளா அமர்த்திருப்பது போல ஒரு புகைப்படத்தை பதவிடுள்ளார்.

- Advertisement -

இதை கண்ட ரசிகர்கள் பலர் நமீதாவிற்கு பதிலாக மிளா பிக் பாஸ்ஸிற்கு செல்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்னரே திருநங்கை ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அப்போதே மிளாவின் பெயர் அடிபட்டது. ஆனால், அவர் இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்ததும் பலரும் மிலாவிடம் நீங்கள் பிக் பாஸ் செல்கிறீர்களா என்று கேள்வி கேட்டு வந்தனர்.

This image has an empty alt attribute; its file name is 1-93-1024x797.jpg

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்து பேசிய மிளா, நான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்றால் எனக்கு நிறைய பர்சனல் வேலை இருக்கிறது. அதோடு இதை பத்தி யாரு கேட்டாலும் யார் பேசினாலும் அம்மா கிட்ட பேசி கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன். அம்மா கூட நீ வைல்ட் கார்டில் போவேன் என்று சொன்னார்கள். ஆனால், இந்த 5 மாதமாக சோசியல் மீடியாவில் இதை பத்தி தான் கேப்பாங்க.

-விளம்பரம்-

உண்மையிலேயே என்கிட்ட வந்து யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பற்றி பேசவே இல்லை. ஆனால், இவர்கள் எல்லாருமே தான் சோசியல் மீடியாவில் பயங்கரமாக பண்ணிட்டு வந்தார்கள். என்னை கூப்பிடவில்லை என்று என்க்கு எந்த வருத்தமும் கிடையாது. நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். எங்க கமினிட்டி சார்பாக நமிதா போனது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று கூறி இருக்கிறார்.

Advertisement