இறுதி போட்டிக்கு வரவில்லை என்றாலும் ராஜுவை நேரில் அழைத்து அண்ணாச்சி கொடுத்த சர்ப்ரைஸ்.

0
155
rajuannachi
- Advertisement -

பிக் பாஸ் பட்டத்தை வென்ற ராஜுவை தன் வீட்டிற்கு நேரில் அழைத்து அவரது வெற்றியை கொண்டாடி இருக்கிறார் இமான் அண்ணாச்சி. ‘ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். தனது வித்தியாசமான மொழி உச்சரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இமான் அண்ணாச்சி.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படத்தில் தான். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இமான் அண்ணாச்சி இருந்தார்.

- Advertisement -

பட்டத்தை வென்ற ராஜு :

இவர் பிக்பாஸ் வீட்டில் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடி மற்றவர்களை மகிழ்வித்து இருந்தார். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள். இது ஒரு பக்கமிருக்க பிக்பாஸ் வீட்டில் சில தினங்களுக்கு முன்பாக போட்டியாளர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை கொண்டாட பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

பைனலுக்கு ஏன் போல :

அதில் இமான், ஐக்கி பெர்ரி, சின்னபொண்ணு, இசைவாணி போன்றோர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பலரும் சோசியல் மீடியாவில் கேட்டிருந்தார்கள். அதேபோல் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் கூட இமான் அண்ணாச்சி மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஏன்? என்ன ஆச்சு? என்று பலரும் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து இமான் அண்ணாச்சி இடம் கேட்டபோது அவர் கூறியது, பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு தொடர்ந்து பட சூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் இருந்தது.

-விளம்பரம்-

பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏன் போகல :

இதனால் பொங்கல் பண்டிகை போது வீட்டிற்கு போக முடியலை. அதேபோல் ஃபைனல் எபிசோடு கலந்து கொள்வதற்காக ஏழு நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஷூட்டிங், டப்பிங் போன்றவற்றில் நான் பிசியாக இருந்ததால் என்னால் தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் என்னால் பினாலேவில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும், ராஜூ தான் டைட்டில் வின் பண்ணிருக்காரு என்று பலரும் சொன்னார்கள். அவன் ஜெயிச்சால் நிச்சயம் சந்தோஷப்படும் முதல் ஆள் நான் தான். மேலும், ஒரு காமெடியன் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை ஜெயிக்கணும் என்று தான் ராஜு பிக்பாஸ் வீட்டில் சொல்லியிருந்தார் என்று கூறியிருந்தார்.

அண்ணாச்சி வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் பட்டத்தை வென்ற தன் தம்பி ராஜுவை வீட்டிற்கு அழைத்து கேக் வெட்டி அவரது வெற்றியை கொண்டாடி இருக்கிறார் அண்ணாச்சி. மேலும், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இமான், வீட்டு பூந்தோட்டத்தில் முளைத்த செடியிலிருந்து கொடியின் பூக்கள் வரை
ஒன்றில் இரு வண்ணம்
அண்ணனும் தம்பியும் போல..!அண்ணனுடன் பிறந்த
தம்பிகளுக்கு மட்டும் தான்
தெரியும் அண்ணனுக்கு
இன்னொரு பெயர்
அப்பா என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement