வெளியான பிக் பாஸ் ப்ரோமோ – இன்னமும் விக்ரம் மோடில் இருந்து மாறாத கமல். இதோ வீடியோ.

0
162
biggboss6
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : வைரலாகும் வனிதாவின் ‘Karma’ பதிவு – ரவீந்தருக்கு போட்டதாக ரசிகர்கள் கமண்ட். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

இதில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் இடத்தை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 6 பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. பின் பிக் பாஸின் 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற ஆர்வம் ஆரம்பித்துவிட்டது. மேலும், இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா? அல்லது சிம்புவே தொடர்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த தகவல்:

ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் கணேஷின் மனைவி ராஜ லட்சுமி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தொகுப்பாளர் ரக்சன், ஸ்ரீநிதி என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டிருக்கிறது. அதேபோல் ஹாட் போட்டோசூட் மூலம் இளைஞர்களை கவர்ந்த தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ப்ரோமோ:

கடந்த சில நாட்களுக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாகிஇருந்தது . அதில் ராஜீவ் தான் பேசிஇருந்தார். இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கமல் தோன்றும் முதல் பிக் பாஸ் 6 ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

Advertisement