வைரலாகும் வனிதாவின் ‘Karma’ பதிவு – ரவீந்தருக்கு போட்டதாக ரசிகர்கள் கமண்ட். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
156
vanitha
- Advertisement -

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சன் மியூசிக் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருக்கும் செய்தி ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கை கொடுத்துள்ளார்.

- Advertisement -

வனிதா குறித்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் :

இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் சமூக வலைதளத்தில் உயர்வுள்ளது திருமணத்தை அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வனிதா திருமண விஷயத்தில் இவர் தலையிட்டு பஞ்சாயத்து செய்ததை குறிப்பிட்டு ஏற்கனவே திருமணம் ஆனவரை வனிதா திருமணம் செய்தால் அது தவறு. ஆனால், நீங்கள் செய்தால் அது நியாயமா என்றெல்லாம் சமூக வலைதளத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

எனக்கும் இரண்டாம் திருமணம் தான் :

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்..திருமணத்திற்கு பின்னர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஒரு சில பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பேசிய ரவீந்திரன் எங்கள் திருமணத்திற்கு பின்னர் பலரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்துவிட்டார் என்று தான் தலைப்புகளை போட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

வனிதாவிற்கு தெரிந்தால் இதான் செய்வார் :

ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான். ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து நான் அவ்வளவாக வெளியில் சொன்னது கிடையாது என்பதால் எனக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது. கல்யாணம் ஆனதுக்கு முன்னாடி இவை கிட்ட சேலஞ் பண்ணி சொன்னேன். வனிதா நிச்சயம் எனக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று. அதேபோல வனிதா விஜயகுமார் விஷயத்தில் எனக்கு திருமணமான விஷயம் வனிதாவிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கும் ஒருவேளை நாங்கள் இருவரும் சுமூகமான உறவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் எனக்கு வாழ்த்துக்களை சொல்லி இருப்பார்.

வனிதாவின் பதிவு :

ரவீந்தர் திருமண விஷயத்தில் வனிதா என்ன சொல்ல போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். Karma யாரையும் சும்மா விடாது. அதற்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவை ரவீந்தரை குறிப்பிட்டே வனிதா போட்டு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement