மண்ணை கவ்விய சீசன் 5, இம்முறை சர்ச்சை போட்டியாளர்களே டார்கட் – பிக் பாஸ் 6 துவங்கும் தேதி இதோ.

0
408
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் நிகழ்ச்சியில் பிரியங்காவும் பிடித்தார்கள். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிவந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின்னர் வைல்ட் கார்ட் போட்டியாளராக ரம்யா பாண்டியன், சதிஷ் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் :

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதாக வரவேற்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல இந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட் அடித்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக திடீரென்று விலகினார் கமல். பின்னர் அவருக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த சீசனில் முதல் பரிசை பாலாஜி முருதாசும் இரண்டாம் இடத்தை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவைடந்ததால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்தனர்.

biggboss

சீசன் 5 தோல்விக்கான காரணம் :-

அபினய், அபிஷேக், அக்ஷரா, சிபி, சின்னபொண்ணு, இமான், இய்க்கி, இசைவாணி, மதுமிதா, நதியா, நமீதா, நிரூப், பாவ்னி, பிரியங்கா, ராஜு, சுருதி, தாமரை, மற்றும் வருண் இவர்களை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5 ஆரம்பமானது. ஆனால் சீசன் 5 இதற்கு முந்தைய நாலு சீசன்களைப் போல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இல்லாமல் இருந்தது இதற்கு காரணம் போட்டியாளர்கள் சரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதிலும் இந்த சீசனில் விஜய் டிவி ஆர்ட்டிஸ்ட்கள் தான் நிரம்பி வழிந்து இருந்தனர்.

-விளம்பரம்-

சீசன் 6 போட்டியாளர்களே தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனத்துடன் விஜய் டிவி செயல்படும் என்ன தெரியவந்துள்ளது. அதிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை இந்த முறை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 6 பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று சமீபத்தில் கூறப்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 தொடங்கும் நாள் வெளியாகி உள்ளது அக்டோபர் இரண்டாம் தேதி சீசன் 6 தொடங்க உள்ளது என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.

சீசன் 6 அப்டெட் :-

ஓடிடி இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுப்பாளர் பணியை யார் செய்வது சிம்புவா கமலா என்ற கேள்வி பெரும்பாலானோர் மத்தியில் இருந்தது. தற்போது வந்த தகவலின்படி சீசன் 6 கமலஹாசன் அவர்களே தொகுப்பாளராக வருகிறார். சீசன் 6 காண புரோமோ காட்சிகள் விரைவில் சூட்டிங் எடுக்கப்பட உள்ளதாகவும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்தது.

Advertisement