தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 40 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இது குறித்து சிலர் பிரதீப்க்கு ஆதரவாக பேசி இருந்தார். பிறகு கடந்த வாரம் எவிக்ஷன் நடக்காது என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அன்னபாரதி வந்த வேகத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் வெளியேறினாலும் அவரை பற்றிய பேச்சுக்கள் இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
பிக் பாஸ் 7:
சமீபத்தில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் தெரிவித்து பின்னால் பேசிய விஷயங்கள் அனைத்தையும் திரையில் போட்டு காண்பிக்கப்பட்டு அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்கில் நிக்ஸன் வினுஷாவை பற்றி உடல் ரீதியாக கமெண்ட் செய்தது பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் பிராவோ குறித்து தவறாக பேசியது போன்ற விஷயங்கள் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இந்த விஷயங்கள் எல்லாம் சரவெடி போல வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஷ்பானம் போல புஷ் சென்று ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக நிக்சன் வினிஷாவின் உடல் அமைப்பு குறித்து ஐசுவிடம் பேசி இருந்தது பற்றி கூறிய போது அர்ச்சனா, விசித்ராவை தவிர வேறு யாரும் கேள்வி கேட்கவில்லை. மேலும் தான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை என்றும் வினுஷாவிடம் இதுகுறித்து பேசி அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.
வீட்டில் நடந்த கலவரம்:
மேலும் பிராவோ தவறாக பார்க்கிறான் என்று மாய மற்றும் ஐசு பேசியதை சும்மா விளையாட்டாக பேசினோம் என்று அந்த விஷயத்தை சர்வ சாதாரணமாக கடந்து சென்று விட்டார்கள். மேலும் இந்த விஷயத்தை பற்றி யாரும் அதன்பின்னர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.
புதிய ப்ரோமோ:
இந்த டாஸ்கில் தினேஷ், மாயா நிக்சனிடம் உள்ளாடையை எடுத்து காண்பித்ததை வழக்காக போட்டு இருந்தார். ஆனால், அப்போதும் அது ஒரு Adult ஜோக், அதை சொன்னது தப்பில்லை என்று வாதாடினார் மாயா. இப்படி இந்த வாரம் பல கலவரங்கள் வெடித்து இருக்க கமல் இந்த வாரம் என்ன செய்ய போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், விசித்ரா-அர்ச்சனா இருவரும் தங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு கமலிடம் முறையிடுகிறார்கள். கமலும், மாயாவிடம் டூத் பிரஸ் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்? பின் ஜோவிகா, எனக்கு மூளை இல்லை என்று திட்டுகிறார்கள் என்று சொல்லி அழுகிறார். ஆக மொத்தம் இன்று கமல் வச்சு செய்ய போகிறார்.