பெண் போட்டியாளர்களிடம் கொச்சையாக பேசிய பொன்னம்பலம் ! முகம் சுளித்த போட்டியாளர்கள்

0
1036
Bigg-boss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பத்தின் மீதான பல குற்றச்சாட்டுகள் சக போட்டியாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்தே கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம் பெண்களிடம் கொச்சையான வார்த்தை பயன்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

bigg boss

- Advertisement -

இன்று (ஜூன் 26) ஒலிபராகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10 வது எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வைஷ்ணவி மும்தாஜிடம் , நடிகர் பொன்னம்பலம் பெண்களை கொச்சை வார்த்தை பயன்படுத்தி கிண்டல் செய்தார் என்று கூறினார்.

அதற்கு என்னவென்று கேட்ட மும்தாஜிடம் நடிகை வைஸ்ணவி ‘மஹத், ஐஸ்வர்யா, யாசிக்க மற்றும் சிலரும் படுக்கை மீது அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தோம், அப்போது ஐஸ்வர்யா, நடிகர் பொன்னம்பலத்தை எங்களுடன் சேர்ந்து வந்து உட்காருங்கள் என்று கூறினார்.

-விளம்பரம்-

ponambalam actor

அதற்கு பொன்னம்பலம் ‘ஏற்கனவே எனக்கு பல குழந்தைகள் இருக்கின்றனர், நான் அங்கு வந்தால் இன்னும் நிறைய குழந்தை பிறந்து விடும்’ என்று கூறியுள்ளார். ஒரு பெண்ணை இப்படியா கூறுவது என்று ரம்யா கேட்க. உடனே மும்தாஜும் பொன்னம்பலத்திடம் போய் சென்று இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால், நடிகர் பொன்னம்பலம் ‘நான் தப்பான எண்ணத்தில் கூறவில்லை, விளையாட்டாக தான் கூறினேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement