விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்று (அக்டோபர் 4) முதல் துவங்க இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து தள்ளிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒரு வழியாக துவங்க இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. கொரோணா பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் நேற்று மாலை துவங்கியது.நேற்றே போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டனர். ஆனால், இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் என்று 100 சதவீத தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு சில லீக்ஸ் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு நிலையில் சற்று முன்னர் இன்றைய புது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல், ஒரு கருப்பு கோட் ஷூட்டில் வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார். எதிர்பார்த்தது போல இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது ப்ரோமோ மூலம் தெளிவாக தெரிகிறது.
இது ஒருபுறம் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை ஆண்டு நடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, அப்படி கணக்கு செய்து பார்த்தால் 105வது நாள் ஜனவரி 16, ஞாயிற்று கிழமை வருகிறது. எனவே, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தீபாவளி பண்டிகையையும், பொங்கல் பண்டிகையையும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தான் கொண்டாடுவார்கள்.