கலவரமாக மாறிய பிக் பாஸ் வீடு, டாஸ்க் பிராப்பர்ட்டிகளை சேதப்படுத்தும் போட்டியாளர்கள். கண்டிப்பாரா பிக் பாஸ்.

0
246
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்திருக்கிறது 18 போட்டிகளில் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டது அறிவிக்கப்பட்டார் இவர்களை தொடர்ந்து மலேசியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நாடியா முதல் போட்டியாளராக வெளியேறினார்.

-விளம்பரம்-

பின்னர் இந்த சீசனில் கண்டன்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ராஜா, இரண்டாம் வாரத்திலேயே வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த வாரம் சின்ன பொண்ணு வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

- Advertisement -

இந்த சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்தும் இதுவரை எந்த ஒரு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டில் நடக்க வில்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது மேலும் பிக்பாஸில் கொடுக்கப்படும் சுவாரசியமாக இல்லை இப்படி ஒரு நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் எபிசோட் 4 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் தலைவர் டாஸ்குக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்படுகிறது. ‘செண்பகமே செண்பகமே’ என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பால் கறக்கு பணியில் ஈடுப்படுகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் வெடித்து இருக்கிறது. இதில் டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட பொருட்களை எல்லாம் எடுத்து வீசி சேதப்படுத்தி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement