பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் குறித்த ப்ரோமோ வீடியோ தான் தற்போது மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார்.
அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8:
அந்த வகையில் நேற்று போட்டியாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு பாய்ஸ் ஒருபுறம், கேர்ள்ஸ் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் வாரம் ஜாலியாக இருக்கும்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால் இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற உடனே பெண்கள், ஆண்கள் தனியாக பிரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுக்கிறார்கள்.
முதல் எவிக்ஷன் ப்ரோமோ:
இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிசனுமே போட்டார்கள். இதை பெண்கள் ஏற்று கொண்டார்கள். முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க்கும் சலசலப்பு தொடங்கிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் முதல் நாளில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறது. இது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.
வெளியேறிய நபர்:
இதை கேட்டு போட்டியாளர்கள், ஒரு நாளில் எப்படி போட்டியாளர்களை பற்றி தெரிந்து எவிக்ஷன் செய்ய முடியும் என்று சலசலப்பு தொடங்கி விட்டது. பின் ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் சத்யா, ரவீந்தர், சாச்சனா நமிதாஸ், ஜாக்லின், அர்னவ் ஆகியோரை நாமினேட் செய்திருக்கிறார்கள். இதில் சாச்சனா நமிதாஸ் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இது போட்டியாளர்களுக்கு மட்டுமில்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.