கமல், போட்டியாளர்கள் சம்பளம் Rights உரிமை, ஸ்பான்சர்ஸ் என்று பிக் பாஸில் எவ்ளோ கோடி செலவாகிறது தெரியுமா ?

0
460
biggboss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. நான்கு சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி கோலாகலமாக தொடங்கி மூன்று வாரங்களை கடந்து உள்ளது.தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. கடந்த சீசன் களை விட இந்த முறை பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து உள்ளார்கள். இந்த முறை நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். குறிப்பாக தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் நதியா சாங்க், இரண்டாவது அபிஷேக் எலிமினேட் ஆனார்கள்.

-விளம்பரம்-

பின் 15 போட்டியாளர்களுடன் கடந்த வாரத்தில் இருந்து பஞ்சபூதம் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனால் போட்டியாளர்களுக்குள் சலசலப்பும் கலவரமும் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உருவாக தேவைப்படும் பணம் குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதை ரசிகர்கள் அதிகமாக வைரலாகி வருகிறார்கள். அந்த விடியோவில் கூறியிருப்பது, இந்த ஷோவை ஹிட்டாக வரும் செலிபிரிட்டிக்கு என்று ஒரு தனி சம்பளம் அளிக்கிறது. அதிலும் அவர்களுக்கு ஒரு நாள் அடிப்படையில் சம்பளம் தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை விளம்பரம் செய்வதற்கு என்று தனி செலவாகிறது. அதுவும் இந்த விளம்பரங்கள் நம்ம சேனலின் மட்டுமில்லாமல் மற்ற சேனல்கள், நியூஸ் சேனல்கள், டிஜிட்டலில் என்று பல வகையில் விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் செலவாகும்.

- Advertisement -

இதை தவிர புரோடக்சன் செலவு அதாவது சாப்பாடு, ஹாஸ்பிடல், வீடியோ, எடிட்டிங், எக்யூப்மென்ட், ப்ரி-புரோடக்சன், போஸ்ட் புரோடக்சன் என்று எல்லா வகையிலும் செலவாகும். மேலும், செட் வாடகை ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் என்றால் 100 நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை ஆகிறது. பொதுவாகவே புரோடக்சன் செலவு என்று பார்த்தால் 25-30 கோடி வந்துவிடும். பிறகு செலிபிரிட்டி சம்பளம் என்றால் கமல்ஹாசன் அவர்கள் போன சீசன் வரையும் 40 கோடி வாங்கி இருந்தார். தற்போது அவர் 52 கோடி வாங்குகிறார். ஒரு நாளைக்கு 3.5 கோடியில் இருந்து 4 கோடி வாங்குகிறார். பின் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு வார சம்பளம். ஒரு நாளைக்கு 10 ஆயிரம்,20000என்று பிரபலத்தை பொறுத்து சம்பளம் கொடுக்கப்படும். அதை தொடர்ந்து ப்ரமோஷனுக்கு மட்டும் 5-10 கோடி வரை ஆகும்.

இதை தவிர Endemol rights cost என்று பார்த்தால் ஒரு எபிசோடுக்கு 3லிருந்து 4 லட்சம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக 5 கோடி கொடுக்க வேண்டும். ஏன்னா, இந்த நிகழ்ச்சி ஐடியாவை உருவாக்கினது இவர்கள் தான். பிறகு ஸ்பான்ஸர் என்றால் நிப்பான் பெயிண்ட் மற்றும் ப்ரீத்தி இவங்க ரெண்டு பேரு தான் பிக்பாஸின் ஸ்பான்சர். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து 14 கோடி தருகிறார்கள். இவர்களை தவிர பிற ஸ்பான்சர் , powered by, கீழே உள்ள ஸ்பான்சர் என எல்லாம் சேர்த்தினால் மொத்தம் ஸ்பான்சர் மூலமே 50-60 கோடி வந்துவிடும். மொத்தத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு சீசனுக்கு 80– 100 கோடி இருந்தால் மட்டும் தான் பிக்பாஸ் வெளியிட முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை கேட்டு ரசிகர்கள் அனைவருமே வாயைப் பிளந்து பிக்பாஸ் வீட்டிற்கு இவ்வளவா! செலவாகும் என்று கமென்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement