தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே இந்தி,மலையாளம், தெலுகு என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அணைத்து மொழி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டால்க் ஆப் தி டௌனாக மாறியுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது தெலுங்கு பிக் பாஸ் இரண்டாவது சீசனை தெலுங்கு நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழ் பிக் பாஸ் போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் தெலுங்கு பிக் பாஸ் சீசனும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தீப்தி நல்லமொத்தோ என்பவரை காப்பற்ற Ram IT soultions என்ற நிறுவனதில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், பணம் பெற்றுக்கொண்டு தீப்தி நல்லமொத்தோவிற்கு அதிக வாக்குகள் விழுவதற்கான மோசடி வேலையில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Advertisement

ஆனால், இதனை மறுத்துள்ள Ram IT soultions நிறுவனம், எங்கள் நிறுவனம் தவறு செய்தால் நீங்கள் புகார் அளியுங்கள். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ் பிக் பாஸில் ஐஸ்வர்யாவை காப்பற்றா பெங்காலி ரசிகர்கள் சிலர் ஐஸ்வர்யாவிற்கு வாக்களித்தால் பணம் தரப்படும் என்று அறிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement