விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இடையே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து 9 பேர் வெளியே இருக்கும் நிலையில் 12 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்கள். மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அனைவரையுமே நாமினேட் செய்து இருந்தார் பிக்பாஸ். அதேபோல இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருப்பதால் நமினேஷனில் இருந்து தப்பிக்க இந்த வாரம் முழுவதும் பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுவந்தது . இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்கில் முதல் டாஸ்கில் சிபி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் டாஸ்கில் நிரூப் வெற்றிபெற்றார். இவர்களை தொடர்ந்து தாமரை, சஞ்சீவ், அமீர் ஆகியோர் நாமினேஷன் free டாஸ்கில் வென்று தப்பித்தனர்.
பிக் பாஸ் கொடுத்த பரிசு :
நேற்றய நிகழ்ச்சியில் Preethi டாஸ்க் கொண்டு கொடுக்கப்பட்டது. இதில் எபிசோடில் புளு மற்றும் சிகப்பு ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே சமையல் போட்டி வைக்கப்பட்டது. இந்த சமையல் போட்டியில் புளூ டீம் வெற்றி பெற்றதாக நடுவர் குழு அறிவித்தது. இதனால் வெற்றி பெற்ற புளூ டீம் அணியில் இருந்த தாமரை, அக்சரா, சிபி மற்றும் அபினய் ஆகியோர்களுக்கு கேஸ் ஸ்டவ் பரிசாக வழங்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார்.
தாமரை வீட்டில் இருக்கும் கேஸ் அடுப்பு :
இந்த அறிவிப்பை கேட்ட உடன் ப்ளூ டீமில் இருந்த மற்றவர்களை விட தாமரை தான் துள்ளி குதித்து இருந்தார். அதிலும் ‘எங்க வீட்டில் அடுப்பே இல்ல’ என்று மகிழ்ச்சி போங்க தாமரை கூறியது மற்றவர்களை நெகிழ செய்தது. இப்படி ஒரு நிலையில் உண்மையில் தாமரையின் வீட்டில் கேஸ் அடுப்பு உள்ளது என்றும், அவர் பொய் சொல்கிறார் என அவரது புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், சமையல் அறையில் இருக்கும் தாமரையின் அருகில் கேஸ் ஸ்டவ் ஒன்று இருக்கிறது, எனவே, ஏன் இப்படி தாமரை பொய் சொல்ல வேண்டும் என ரசிகர்கள்பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்தால் அந்த கேஸ் அடுப்பில் ஆன் செய்யும் நாப் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
தாமரையின் உண்மை நிலை :
எனவே, கேஸ் அடுப்பு கிடைத்ததும் தாமரை அப்படி சந்தோசப்பட்டு குதித்ததில் எந்த ஒரு தவறும் இல்லை. பிக் பாஸ் வீட்டில் தான் கடந்து வந்த பாதை குறித்து தாமரை பேசிய போதே தான் பட்ட கஷ்டங்களை கூறி இருந்தார். அதே போல தாமரை தனது முதல் கணவரால்பட்ட கஷ்டங்களை கூட சொன்னார. மேலும், இவரது இரண்டாம் கணவர் ஒரு ஜவுளி கடையில் வேலைபார்க்கிறார் என்பது பலரும் அறிந்திடாத உண்மை.