மாடி வீட்டில் வாழ்ந்து வரும் தாமரை, ஓலை குடிசையில் வாழ்ந்து வரும் அவரின் அம்மாவிற்கு ஜேம்ஸ் வசந்தன் மூலம் புதிய வீடியோ அவரே பகிர்ந்த வீடியோ.

0
935
james
- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமயமில்லாத பலர் பங்கேற்றனர். அதில் ஒருவர் தாமரை செல்வி மேடை கலைஞரான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலம் கிடைத்தது. அதே போல அந்த சீசனில் இறுதி வாரம் வரை வந்தார் தாமரை செல்வி. அந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் தாமரை. அதே போல சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரை செல்வி பங்கேற்று இறுதி போட்டி வரை வந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தாமரைச் செல்வியின் குடும்ப உறுப்பினர்களிடம் பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர்கள் கூறியிருப்பது, நான் தாமரைச் செல்வியின் அம்மா. சின்ன வயசில் இருந்தே என் மகள் மிகவும் கஷ்டப்பட்டார். பள்ளியில் படிக்கும்போதே நல்ல ஆடுவாள். அதனால் தான் அவளுக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பின் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப சூழ்நிலைக்காக அவர் நாடகத்தில் நடிக்கச் சென்றார். நாடகத்தில் வரும் சம்பளத்தை வைத்துக் கொண்டு தான் எங்களை அவள் பார்த்தாள். அவள் கட்டி தந்த வீடு தான் இது.

- Advertisement -

ஓலை வீட்டில் வசித்து வரும் தாமரை குடும்பம் :

இன்னும் எங்களால் வீடு கட்ட முடியவில்லை. என் மகளுக்காக தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு முன்னாடி எங்கள் வீட்டில் டிவி இல்லை. அவள் தந்த டிவியை வைத்து தான் நாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்தோம் என்று கூறினார். இவரைத் தொடர்ந்து தாமரைச்செல்வி அக்கா கலைச்செல்வி கூறியது, சின்ன வயதில் இருந்தே என்னுடைய தங்கை மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் பிக் பாஸ் வீட்டில் இவ்வளவு திறமையாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தாமரையின் பட்டதாரி தங்கை :

ஏனென்றால், அங்கு இருப்பவர்கள் பலரும் படித்தவர்கள். இவல் எப்படி போட்டி போட முடியும் என்று நினைத்தேன். ஆனால், தாமரை மிகத் திறமையாக விளையாடி இறுதிக்கட்டம் வரை வந்தது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. ஆனால், அவள் நன்றாகத்தான் விளையாடினால் ஏன் வெளியேற்றினார்கள் என்று தெரியவில்லை. அதுதான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். இவரை தொடர்ந்து தாமரை தங்கை விஜயலட்சுமி கூறியது, எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி நான் தான்.

-விளம்பரம்-

சொந்த வீட்டில் வசித்து வரும் தாமரை :

என் அக்காதான் படிக்க வைக்கிறாள். கல்லூரியில் என் அக்கா தான் தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர் என்று சொன்னால் ஆரம்பத்தில் யாருமே நம்பவில்லை. அவள் இவ்வளவு சூப்பராக விளையாடுவார் என்று எங்களுக்குத் தெரியாது. பிக் பாஸ் வீட்டில் அவ்வளவு திறமையாக விளையாடி வந்தார். அவர் வெளியே வந்தது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரின் வீட்டின் புகைப்படம் ஒன்று வைரலானது.

ஜேம்ஸ் வசந்தனால் புதிய வீடு :

அதே போல தாமரையின் வீட்டிற்க்கே சென்று சிலர் பேட்டியும் எடுத்தனர். ஆனால், தாமரை செல்வியின் குடும்பம் மட்டும் இன்னும் ஒரு ஓலை குடிசையில் தான் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் தொகுப்பாளரும் இசையமைப்பாராளரு மான ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் தாமரை செல்வியின் குடும்பத்திற்கு வீடு ஒன்று அமைய இருக்கிறது. பலரின் உதவியோடு தாமரை குடும்பத்திற்கு புதிய வீட்டை விரைவில் கட்டித்தர இருப்பதாக ஜேம்ஸ் வசந்தன் தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement