bathroom போக வீல் சேரை தள்ளவே கஷ்டப்பட்ட ரம்யா, பார்த்தும் பார்க்காதது போல சாப்பிட்டு கொண்டு இருந்த தாமரை. ச்ச பாகுவே பாவமா இருக்கு இந்த வீடியோ.

0
622
Ramya
- Advertisement -

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இதில் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு தாமாகவே வெளியேறி இருந்தார். அதே போல நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த சுரேஷ் சக்ரவர்த்தியும் உடல் நல பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் இறுதி நாமினேஷன் என்பதால் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் பல தனியார் சமூக வலைதள பக்கத்தில் நடைபெற்று வந்த வாக்கெடுப்புகளில் அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அனைவரும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று அபிராமி திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

இதையும் பாருங்க : இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் நடைபெற்ற ஸ்ரீப்ரியா மகளின் திருமணம் – என்ன காரணம் தெரியுமா ?

- Advertisement -

நேற்று வெளியேற்றப்பட்ட அபிராமி :

இதனால் பாலாஜி, ஜூலி, ரம்யா பாண்டியன், நிரூப், தாமரை ஆகிய 5 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். மற்ற சீசன்களை விட இந்த சீசனில் பிஸிக்கல் டாஸ்க் மிகவும் கடுமையாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் பாலாஜி, நிரூப் போன்றவர்கள் பிஸிக்கல் டாஸ்க்கில் படு ஆக்ரோஷமாக ஆடி இருந்தனர். முன்னதாக டாஸ்கின் போது நிரூப் -க்கு அடிபட்டது.

வீல் சேரில் கஷ்டப்பட்ட ரம்யா :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் நிரூப், ரம்யா பாண்டியன் கால் மீது விழுந்ததால் அவருக்கு காலில் கடுமையான காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் ரம்யா பாண்டியன் நடக்க முடியாமல் போனதால் அவருக்கு வீல் சேர் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ரம்யா பாண்டியன் கடந்த சில தினங்களாக வீல் சேரில் தான் இருந்து வருகிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கண்டுகொள்ளாதா தாமரை :

இப்படி ஒரு நிலையில் நேற்றய எபிசோடில் ரம்யா பாண்டியன் கழிவறைக்கு செல்வதற்காக வீல் சேரில் நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டு இருந்தார். ஆனால், கழிவறை வாசலில் இருந்த மேட்டை கடக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். அப்போது சாப்பிட்டு கொண்டு இருந்த தாமரை அதனை பார்த்தும் அவருக்கு உதவி செய்ய செல்லவில்லை. இந்த வீடியோவை கண்ட பலரும் தாமரையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆரம்பம் முதலே முட்டிக்கொண்டு தாமரை :

ரம்யா பாண்டியன் உள்ளே சென்ற நாளில் இருந்தே மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். சொலப்போனால் பிக் பாஸ் வீட்டில் யாருடனும் கூட்டு சேராமல் விளையாடி வருவது ரம்யா மட்டும் தான். அதே போல இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்தே இவருக்கும் தாமரைக்கும் அடிக்கடி சண்டை வெடித்துக்கொண்டு தான் இருந்தது. இருப்பினும் ரம்யாவிற்கு இந்த சூழலில் கூட உதவி செய்யாமல் தாமரை வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Advertisement