இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் நடைபெற்ற ஸ்ரீப்ரியா மகளின் திருமணம் – என்ன காரணம் தெரியுமா ?

0
492
sripriya
- Advertisement -

நடிகை ஸ்ரீபிரியா மகளின் திருமணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. இவர் 1970 மற்றும் 1980 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அதிலும் பேரழகி ஸ்ரீதேவிக்கு நிகராக போட்டி போட்டு நடித்து வளர்ந்தவர் ஸ்ரீபிரியா என்று சொல்லலாம். இவர் இதுவரைக்கும் 300 திரைப் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதுவும் இவர் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்கள் என பிரம்மாண்டமாக நடித்து அசத்தியவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின் சிறிது காலம் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஆளவந்தான் படத்தில் வந்தது உண்மையில் நீங்க தானா ? முதன் முறையாக மனம் திறந்த மிர்ச்சி சிவா. இதோ வீடியோ.

- Advertisement -

நடிகை ஸ்ரீபிரியா குடும்பம் ;

அதுமட்டுமில்லாமல் இவர் இரு திரைப்படங்களையும், இரு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இதனிடையே நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகார்ஜுன் மற்றும் ஸ்நேகா என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் ஸ்நேகா 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது கல்லூரி படிப்பை லண்டனில் படித்தார்.

ஸ்ரீபிரியா மகள் சினேகா :

அங்கு வழக்கறிஞர் துறையில் பட்டம் பெற்று ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார். இப்படி பட்டம் பெற்று பல ஆண்டுகளாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்தார் ஸ்நேகா. ஸ்ரீபிரியா கடந்த 2013ஆம் ஆண்டு மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் பிரஸ் மீட்டில் தனது மகள் ஸ்நேகாவை முதல் முதலில் வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ரீபிரியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ரீப்ரியா மகளின் திருமணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

லண்டனில் நடைபெற்ற திருமணம் :

நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில், சட்டத்தில் முதுகலை முடித்துள்ளார். சினேகாவும், தொழிலதிபர் அன்மோல் சர்மாவும் லண்டனில் சந்தித்தபோது ஒருவரையொருவர் காதலித்தனர். பிறகு இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் வட இந்திய முறைப்படி பிப்ரவரி 6 ஆம் தேதி லண்டனில் திருமணம் செய்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய முறைப்படி இவர்களின் திருமணம் ஏப்ரல் 4, 5, 6 தேதிகளில் சென்னையில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

பிரபலங்கள் பங்கேற்பு :

இதைதொடர்ந்து தொடர்ந்து, தென்னிந்திய முறைப்படி மூன்று நாட்கள் திருமண விழா, சென்னையில் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ராதிகா சரத்குமார், சரத்குமார், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement