என்னது பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் வெளியில் செல்வார்களா ? லைவில் உளறி கொட்டிய தாமரை.

0
910
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சவால்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போது பாவனி, பிரியங்கா, அமீர், ராஜ், நிரூப் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபர்களில் ஒருவராக இருந்தவர் தாமரை செல்வி. இவர் நாடக நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே பாஸில் வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்து டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், வீட்டில் 12 லட்ச ரூபாய் பணம் வைக்கப்பட்டபோது தாமரை எடுத்து வெளியே போய்விடுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், தாமரை பணத்தை எடுக்காமல் கடைசி வரை போராடுவோன் என்று விளையாடினார். ஆனால் ,எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகள் எண்ணக்கையின் அடிப்படையில் கடந்த வாரம் தாமரை வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

தாமரை அளித்த பேட்டி:

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்திருந்த தாமரை முதன்முதலாக தனது இணை போட்டியாளரான ஜக்கி பெர்ரி உடன் வீடியோ மூலம் உரையாடி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் தாமரை இடம் அமீர் உங்களை டார்கெட் செய்தாரே? அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு தாமரை கூறியது, அமீர் தனக்கு அம்மா இல்லை. சின்ன வயசிலிருந்தே தனியாக இருந்து கஷ்டப்பட்டு இருக்கேன் என்று சொல்லும்போது எனக்கு ரொம்ப வருத்தமாக ஆகிவிட்டது. அன்று இரவு அவனை நினைத்தே நான் ரொம்ப உடம்பு முடியாமல் போய் விட்டது.

priyanka thamarai selvi heated argument in cotton task

என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனார்கள்:

அப்போது அக்ஷராவும், பிரியங்காவும் தான் என்னை ஆஸ்பிடல் கூட்டிட்டு போனார்கள். அதற்குப் பிறகு நான் அமீரை என் மகனாக தான் நினைக்க ஆரம்பித்தேன். ஆனால், அவர்கள் ஏன் அப்படி நினைக்கிறார்கள் பார்க்கிறவர்களுக்கு ஏன் அப்படித் தோன்றும் மாறி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எப்போதும் நான் அப்படி நினைத்தது கிடையாது என்று கூறியிருந்தார். இப்படி தாமரை பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், தாமரையின் பதிலைக் கேட்ட பிக்பாஸில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் மருத்துவனைக்கு மூவரும் எப்படி சென்றீர்கள்? என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தாமரை பதிலுக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள்:

அதில் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று இருக்கலாம் என்று கூறுகின்றனர். இப்படி தாமரையின் பதிலுக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிரியங்கா, அக்ஷரா இருவரும் தாமரையை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போனாங்கன்னு சொல்றது என்ன லாஜிக்? எல்லாம் விளையாடுறீங்களா. டிவியில் மட்டும் வீட்டுக்குள்ள இருக்கிற மாதிரி காமிகிறீங்க, ஆனால் வெளியே உங்களுக்கு ஏற்றது போல கூட்டிட்டு போயிட்டு வருவீங்களா? பார்க்கிற மக்கள் லூசுங்களா? என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் தாமரை கணவர் சொன்னது:

மேலும், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் தாமரையின் குடும்பத்தினர் தாமரையை பார்க்க சென்றபோது, தாமரையின் கணவர் அவரிடம் ஏன் எல்லாரிடத்திலும் சண்டை போடுகிறாய்? என்று கேட்டிருந்தார். அதற்கு தாமரை நாங்க நல்லா தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் நன்றாக இருந்தாலும் அவர்களே சண்டை போட சொல்றாங்க என்று அவரிடம் எதர்ச்சியாக கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தாமரை இப்படி பேசி இருப்பது ரசிகர்களின் மனதில் மேலும் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. அதேபோல இந்த சீசனில் நமிதா மாரிமுத்துவின் வெளியேற்றமும் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

மருத்துவ காரணங்களுக்காக வெளியேறிய நமீதா மாரிமுத்து....உறுதிப்படுத்திய சுதா  மம்மி | Sudha Mummy confirms Namitha Marimuthu walked out from Bigg Boss 5  tamil - Tamil Filmibeat

நமீதா மாரிமுத்து வெளியேற்றம்:

நமீதா மாரிமுத்து வெளியேறிய போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறி இருந்தார்கள். ஆனால், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நமீதா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது விரதம் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்து விட்டதாகவும், தன்னை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் சில நாட்கள் கழித்து கண்விழித்த பின்னரே தான் தான் மருத்துவமனையில் இருப்பதாகவே தெரியும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement