தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை வீட்டில் இருந்தாலும் பிரச்சனைனு சொல்றாங்க – போட்டியாளரை சர்ச்சையில் சிக்க வைத்த தாமரை.

0
639
thamarai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 55 அந்நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை 9 பேர் வெளியேறிய நிலையில் போட்டியாளர்களுக்குள் அடிக்கடி சண்டை வெடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் தாமரை செல்வியால் அடிக்கடி எதாவது சன்டைகள் எழுந்துவிடுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் தற்போது சவுண்டு பார்ட்டி என்றால் அது நிச்சயம் தாமரை செல்வியாக தான் இருக்கும். இதுவரை தாமாரை செல்வி பிக் பாஸ் வீட்டில் சண்டை இழுக்காதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பிரியங்கா மற்றும் தாமரை செல்விக்கு தான் பிரச்சனை சென்றது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற தலைவர் டாஸ்கில் தாமரை செல்விக்கு தலைவர் ஆகும் தகுதி இல்லை என்று சொன்னதை தற்போது வரை மனதில் வைத்து புலம்பிக்கொண்டு இருக்கும் தாமரை, நேற்றய நிகழ்ச்சியில் ‘தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை, வீட்டில் இருந்தாலும் பிரச்சனை’ என்று பிரியங்கா சொன்னதாக தாமரை செல்வி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே சுருதி விவகாரத்தில் தாமரை குறித்து பேசிய பிரியங்கா, ஆரம்பத்தில் நாம் தாமரையை காப்பாற்ற நினைத்தது உண்மை தான். ஆனால், இனிமேல் இப்படி எல்லாம் செய்யக்கூடாது. அவளுடைய கேம் அவள் விளையாடும் என்று பிரியங்கா சொன்னார். அதுமட்டுமில்லாமல் தாமரை ஆரம்பத்தில் சிம்பதி கிரியேட் பண்ணி மற்றவர்களை தன் பக்கம் இழுத்தார் என்றும், இப்போது அவருடைய சுயரூபம் வெளியே வந்தது என்றும் கூறி இருந்தார் பிரியங்கா.

-விளம்பரம்-
Advertisement