6வதுல இருந்து டான்ஸ் ஆடி காப்பாத்துனா, அவ பிக் பாஸில் அவ ஜெயிக்காமல் போனது – தாமரை குடும்பத்தினர் பேட்டி. வீடியோ இதோ.

0
1177
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு வாரத்தில் பிக் பாஸ் பட்டத்தை தட்டி செல்பவர் யார் என்று தெரிந்து விடும். தற்போது பாவனி, பிரியங்கா, அமீர், ராஜ், நிரூப் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதில் ஒருவர் தான் தாமரை செல்வி. இவர் நாடக நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்து டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், இன்னும் ஒரு வாரம் தாக்கு பிடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று எலிமினேஷனில் தாமரை வெளியேறினார்.

- Advertisement -

தாமரை அம்மா கூறியது:

இப்படி ஒரு நிலையில் தாமரைச் செல்வியின் குடும்ப உறுப்பினர்களிடம் பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர்கள் கூறியிருப்பது, நான் தாமரைச் செல்வியின் அம்மா. சின்ன வயசில் இருந்தே என் மகள் மிகவும் கஷ்டப்பட்டார். பள்ளியில் படிக்கும்போதே நல்ல ஆடுவாள். அதனால் தான் அவளுக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பின் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப சூழ்நிலைக்காக அவர் நாடகத்தில் நடிக்கச் சென்றார். நாடகத்தில் வரும் சம்பளத்தை வைத்துக் கொண்டு தான் எங்களை அவள் பார்த்தாள். அவள் கட்டி தந்த வீடு தான் இது.

தாமரைச்செல்வி அக்கா கலைச்செல்வி கூறியது:

இன்னும் எங்களால் வீடு கட்ட முடியவில்லை. என் மகளுக்காக தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு முன்னாடி எங்கள் வீட்டில் டிவி இல்லை. அவள் தந்த டிவியை வைத்து தான் நாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்தோம் என்று கூறினார். இவரைத் தொடர்ந்து தாமரைச்செல்வி அக்கா கலைச்செல்வி கூறியது, சின்ன வயதில் இருந்தே என்னுடைய தங்கை மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் பிக் பாஸ் வீட்டில் இவ்வளவு திறமையாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

-விளம்பரம்-

தாமரை தங்கை விஜயலட்சுமி கூறியது:

ஏனென்றால், அங்கு இருப்பவர்கள் பலரும் படித்தவர்கள். இவல் எப்படி போட்டி போட முடியும் என்று நினைத்தேன். ஆனால், தாமரை மிகத் திறமையாக விளையாடி இறுதிக்கட்டம் வரை வந்தது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. ஆனால், அவள் நன்றாகத்தான் விளையாடினால் ஏன் வெளியேற்றினார்கள் என்று தெரியவில்லை. அதுதான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். இவரை தொடர்ந்து தாமரை தங்கை விஜயலட்சுமி கூறியது, எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி நான் தான்.

வைரலாகும் வீடியோ:

என் அக்காதான் படிக்க வைக்கிறாள். கல்லூரியில் என் அக்கா தான் தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர் என்று சொன்னால் ஆரம்பத்தில் யாருமே நம்பவில்லை. அவள் இவ்வளவு சூப்பராக விளையாடுவார் என்று எங்களுக்குத் தெரியாது. பிக் பாஸ் வீட்டில் அவ்வளவு திறமையாக விளையாடி வந்தார். அவர் வெளியே வந்தது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். இப்படி தாமரைச் செல்வியின் குடும்ப உறுப்பினர்கள் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement