புதிய வீட்டிற்கு செல்வதற்குள் தாமரை வீட்டில் நேர்ந்த மிகப்பெரிய இழப்பு – ரசிகர்கள் ஆறுதல்

0
5074
- Advertisement -

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மூலம் தாமரை செல்விக்கு புதிய வீடு கட்டி வரப்பட்ட நிலையில் தற்போது தாமரை செல்வி வீட்டில் இறப்பு நேர்ந்துள்ள சம்பவம் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமயமில்லாத பலர் பங்கேற்றனர். அதில் ஒருவர் தாமரை செல்வி மேடை கலைஞரான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலம் கிடைத்தது. அதே போல அந்த சீசனில் இறுதி வாரம் வரை வந்தார் தாமரை செல்வி. அந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் தாமரை.

-விளம்பரம்-

அதே போல சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரை செல்வி பங்கேற்று இறுதி போட்டி வரை வந்தார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே மேடை நாடக கலைஞராக மாறி குடும்ப கஷ்டத்தை போக்க வேலை செய்தார். மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதோடு பிக் பாஸின் வார தலைவராக தாமரை செல்வி தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். ‘

- Advertisement -

இந்த நிலையில் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார். அவர் கூறுகையில் “வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்து விட்டார்களாம்.அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்கள்.

அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே அவரை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் இவர் தனது பிள்ளைகளுக்காக தான் நாடகத்தில் நடித்து வருகிறார் என்று கூறி இருந்தார். தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரின் வீட்டின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதே போல தாமரையின் வீட்டிற்க்கே சென்று சிலர் பேட்டியும் எடுத்தனர்.

-விளம்பரம்-

ஆனால், தாமரை செல்வியின் குடும்பம் மட்டும் இன்னும் ஒரு ஓலை குடிசையில் தான் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் தொகுப்பாளரும் இசையமைப்பாராளரு மான ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் தாமரை செல்வியின் குடும்பத்திற்கு வீடு ஒன்று கட்டி வரப்பட்டது. மேலும் இந்த வீட்டை தான் மட்டும் கட்டித் தரவில்லை என்றும் சில நல்லுள்ளங்கள் சேர்ந்து இந்த வீட்டை கட்டிக் கொடுத்த இருப்பதாகவும் ஜேம்ஸ் வசந்தன் கடந்த ஆண்டு மே மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அந்த வீட்டின் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய அப்பா அம்மாவிற்காக உருவாக்கி வரும் அந்த வீட்டிற்கு தன்னுடைய அம்மாவை அழைத்துச் சென்று சுற்றி காண்பித்து இருந்தார் தாமரை. இந்த வீட்டின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாமரை செல்வியின் தந்தை காலமாகி இருக்கிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் தாமரை செல்விக்கு ஆறுதலை கூறி வருகின்றனர்.

Advertisement