விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5வில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்அதில் ஒருவர் தான் தாமரை செல்வி. இவர் நாடக நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்து டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், இன்னும் ஒரு வாரம் தாக்கு பிடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வெளியேறினார்.
ஏமாற்றமளித்த தாமரையின் வெளியேற்றம் :
தாமரை வெளியேறியது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கமலுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. நீங்கள் வெளியேறுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை, மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று புரியவில்லை என்று கமலே கூறி இருந்தார். சொல்லப்போனால் கடந்த வாரம் நிரூப் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.
தாமரையின் திருமண வாழ்க்கை :
அதே போல தாமரை பணப் பெட்டி டாஸ்கின் போது கூட சிபி எவ்வளவோ கேட்டும் பணப் பெட்டியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும், அதில் ஒரு கோடி இருந்தாலும் எனக்கு வேண்டாம் நான் வெளியில் போய் வேலை செய்து சம்பாதித்துகொள்கிறேன் என்று கூறியது பலரை நெகிழ வைத்தது. தாமரைக்கு முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.
தாமரையின் வீடு எது :
பின்னர் அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவரின் இரண்டாம் கணவர் ஒரு ஜவுளி கடையில் தான் வேலை பார்த்து வருகிறார். மேலும், தாமரைக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை இருக்கிறார்கள். சிறுவயதில் வறுமை காரணமாகவே தாமரை நாடகத்தில் நடிக்க வந்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாமரையின் வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது.
தாமரையின் Home Tour :
அதே போல அது தாமரை செல்வியின் வீடு இல்லை என்றும் பலர் கூறி வந்தனர். மேலும், தாமரை செல்வி ஒரு குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார் என்றும் கூறி வந்தனர்.ஆனால், உண்மையில் அது தாமரையின் வீடு தான். அவரது அம்மா வீடு தான் அந்த குடிசை வீடு. திருமணமான பின்னர் தாமரை செல்வியின் சொந்த உழைப்பில் கட்டியது தான் தற்போது தாமரை வசித்து வரும் வீடு. ஆனால், தாமரையின் பிறந்த வீட்டை இன்னும் தாமரை கட்டவில்லையாம்.
ஜேம்ஸ் வசந்தனால் புதிய வீடு :
தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரின் வீட்டின் புகைப்படம் ஒன்று வைரலானதுஅதே போல தாமரையின் வீட்டிற்க்கே சென்று சிலர் பேட்டியும் எடுத்தனர். ஆனால், தாமரை செல்வியின் குடும்பம் மட்டும் இன்னும் ஒரு ஓலை குடிசையில் தான் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் தொகுப்பாளரும் இசையமைப்பாராளரு மான ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் தாமரை செல்வியின் குடும்பத்திற்கு வீடு ஒன்று அமைய இருக்கிறது. பலரின் உதவியோடு தாமரை குடும்பத்திற்கு புதிய வீட்டை விரைவில் கட்டித்தர இருப்பதாக ஜேம்ஸ் வசந்தன் தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.