விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.
டாப் 10ல் வந்த தாமரை :
இந்த சீசனில் தான் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர். இவர் மேடை நாடக கலைஞர். மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்த தற்போது டாப் 10 போட்டியாளர்களின் ஒருவராக வந்து இருப்பது பாராட்டாக்கூடிய ஒன்று தான்.
மேடை கலைஞர் To பிக் பாஸ் மேடை :
அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தனர். அந்த வகையில் இந்த டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார். வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர்.
தாமரையின் இரண்டாம் கணவர் :
அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்கள். அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். தாமரையின் இரண்டாம் கணவர் சாரதி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருந்தார்.
பிக் பாஸுக்கு அனுப்ப தயக்கம் :
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சாரதி பேசியுள்ளதாவது ‘தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நான் முதலில் கொஞ்சம் பயந்தேன் அதற்கு முதல் காரணம் அவரை பிரிந்து நூறு நாட்கள் இருக்க முடியாது மற்றொரு காரணம் அவருக்கு ரொம்ப கோபம் வரும். இந்த இரண்டு காரணங்களுக்கு தான் வேண்டாம் என்று சொன்னேன். பின்னர் அவரின் ஆர்வத்தை பார்த்து சரி போகட்டும் என்று சொல்லிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இவர் தான் பிக் பாஸ் ஜெயிப்பார் :
அதே போல டிவியில் பார்க்கும் பிரியங்காவிற்கும் உள்ளே பார்க்கும் பிரியங்காவிற்கும் நிறைய வித்யாசம் என்று கூறியுள்ளார். மேலும், இந்த சீசனில் ராஜு தான் வெற்றி பெறுவார் என்றும் 10 ஓட்டில் தாமரைக்கு 8 ஓட்டு போட்டால் 2 ஓட்டு ராஜுவிற்கு போடுவேன் என்று கூறியுள்ளார். அதேபோல எனக்கு தற்போது யார் மீது இந்த சீசனில் கோபமும் வருத்தமும் இருக்கிறது என்று கேட்டதற்கு அவரை கூறியிருக்கிறார் மேலும், பாவணியிடம் நடந்து கொள்ளும் விதம் பிடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.