பிக் பாஸ் தாமரைச்செல்வி சமீபத்தில் புது கார் வாங்கி இருக்கும் நிலையில் அவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமயமில்லாத பலர் பங்கேற்றனர். அதில் ஒருவர் தாமரை செல்வி மேடை கலைஞரான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலம் கிடைத்தது. அதே போல அந்த சீசனில் இறுதி வாரம் வரை வந்தார் தாமரை செல்வி. அந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் தாமரை.
அதே போல தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரை செல்வி பங்கேற்று இறுதி போட்டி வரை வந்தார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே மேடை நாடக கலைஞராக மாறி குடும்ப கஷ்டத்தை போக்க வேலை செய்தார். மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் புது கார் ஒன்று வாங்கி இருந்த செய்திகள் வைரலானது. .
தாமரை கணவர் :
இந்நிலையில் தற்போது தாமரை மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து பேட்டி அளித்திருக்கிறார்கள் அந்தப் பேட்டியில் முதலில் பேசிய தாமரையின் கணவர் பார்த்தசாரதி, நான் திருவிழாவில் தான் தாமரையை முதல் தடவை பார்த்தேன். அப்போ அவங்க ஒரு பிரச்சனையில் இருந்தாங்க. அவங்களை மீட்டு அவங்க வீட்ல விட்டுட்டேன். அதற்குப் பிறகுதான் தாமரை மீது எனக்கு காதல் உருவானது. ஒரு வருஷம் வரை அவங்க ஒத்துக்கல. யாராவது ஆதரவற்ற பெண்கள் இருக்காங்களான்னு பேசி, கொஞ்சம் கொஞ்சமா க்ளோஸ் ஆகி அதன்பின் தான் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியிருக்கிறார்.
தாமரைச்செல்வி பேட்டி:
அதை தொடர்ந்து பேசிய தாமரை, சுத்தி இருக்கிறவங்க ஆயிரம் கமெண்ட் செய்வாங்க. அவங்க அவங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. நான் அப்போ சின்ன வயசு. ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன். நாடகத்துக்குப் போகும் போது தான் தைரியம் வந்தது. இவர் என் பின்னாடி சுத்தும் போது கூட கண்டுக்கவே இல்லை. எதுவுமே வேண்டாம். அம்மா கூடவே இருந்துகிட்டு பிள்ளையைக் காப்பாத்திடலாம் என்றுதான் நினைத்தேன். மறுபடியும் திருமணம் செய்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
கணவர் மற்றும் திருமணம் குறித்து :
மேலும், எங்களுக்கு திருமணம் ஆன பிறகு கூட நான் பயந்துட்டே தான் இருந்தேன். இதுவரை நாங்க சண்டை போட்டதே கிடையாது. எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருப்பார். குழந்தையே பெத்துக்க மாட்டேன்னு இருந்தேன். ஆனால், என் முதல் பையனையும் நல்லா பார்த்துகிட்டார். எங்களுக்கு ரொம்ப சாதாரணமாக தான் திருமணம் நடந்தது. பிக் பாஸ்க்கு முன்னாடி வரைக்கும் எங்களுக்குள் சந்தோஷமே இருந்தது கிடையாது. நான் நாடகத்துக்குப் போயிடுவேன். அவரு ஜவுளி கடைக்கு வேலைக்குப் போயிடுவார். எங்கள் வேலை காரணமாக நாங்கள் சந்தித்துக் கொண்டதே கிடையாது.
இருபது ரூபாய் இல்லாம கஷ்டப்பட்டோம்:
என் முதல் பையனுக்கு இவரும் தான் ரொம்ப நெருக்கமாக இருப்பாங்க. நான் கர்ப்பமாக இருக்கும் போது மயங்கி விழுந்து விடுவேன். அப்போது பெரியவன் தான் அவர் நம்பருக்கு ஒரு ரூபாய் காயின் போன்ல தகவல் சொல்வான். அதே மாதிரி பெரியவனும் என் மாமியாரும் ரொம்ப க்ளோஸ். அவ்வா, நல்லவங்க அம்மா அதனால் சொர்க்கத்துக்கு தான் போவாங்கன்னு சொல்லுவான். நான் மாசமாக இருக்கும் போது, எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிடும். அதனால் இவரும் வேலைக்கு போக மாட்டார். அப்போ நாங்க இருவது ரூபாய் காசு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறோம். ஹாஸ்பிடல்ல வேலை செய்றவங்க தான், இருபது ரூபாய் கொடுத்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தாங்க என்று தாமரை எமோஷனலாக பேட்டியில் கூறியிருக்கிறார்.