விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மற்ற இரண்டு சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வேற லெவல் பிரபலமானது.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தர்ஷன்.
இவர் இலங்கையை சேர்ந்த மாடல் ஆவார். இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான வேறென்ன வேண்டும் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகர் தர்ஷன் அவர்கள் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது நடிகர் கமலஹாசன், தர்ஷன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபர் என்று அறிவித்திருந்தார். இதனால் இந்தியன்-2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தர்ஷன் தற்போது சத்யா தொடரில் நடித்து வரும் ஆயிஷாவுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலில் சித் ஸ்ரீராம் தான் பாடியிருக்கிறார். இந்தியன் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது சீரியல் நடிகையுடன் ஜோடி போட்டு ஆல்பம் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இதுபோக தர்ஷன் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. தர்சன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்த படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார் என்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கிறார். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் வேலைகள் நடைபெற இருக்கு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.