மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்களா. தர்ஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சனம் ஷெட்டி.

0
9149
tharshan-sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் முகேன் முதல் பரிசையும் சாண்டி இரண்டாவது பரிசையும் தட்டிச் சென்றார்கள். ஆனால், இந்த சீசனில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று சக போட்டியாளர்கள் சரி, ரசிகர்களும் சரி மிகவும் ஆணித்தரமாக நம்பி வந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதிப் போட்டியில் இரண்டு வாரத்திற்கு முன்பாக தர்ஷன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் சென்ற தர்ஷன் ஷெரினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் தர்ஷன் மற்றும் ஷெரின் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. தர்ஷன் வெளியேறியதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதையும் பாருங்க : எனக்கு அந்த இடம் கிடைத்தது வருத்தமாக இருக்கிறது. புலம்பும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்.

- Advertisement -

சனம் ஷெட்டி தான் தர்ஷனை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால், தர்ஷன் இதுவரை யாரை காதலிக்கிறார் என்று சொன்னதே இல்லை. இருப்பினும் சமீபத்தில் சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் இருவரும் சேரன் நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜாவுக்கு செக் என்ற படத்தின் ப்ரீ ஷோவிற்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் காதல் முறிந்ததாக சில செய்திகள் வெளியாகியது. சமீபத்தில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், நான் நிறைய கேட்கவில்லை. ஆனால் தவறான நபரிடம் கேட்டு விட்டேன் என்பது இப்போது தான் புரிகிறது என்றுபதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், சனம் ஷெட்டியின் இந்த பதிவு கண்ட நெட்டிசன்கள், நீங்களும் தர்ஷனும் பிரிந்து விடீர்களா என்று கமன்ட் செய்து வந்தனர். அதே போல சமீபத்தில் சென்ற சனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு கூட தர்ஷன் எந்த பதிவையும் போடவில்லை. இந்த நிலையில் சனம் ஷெட்டி தர்ஷன் தோல் மீது கை போட்டு நின்றுகொண்டு இருக்கும்படி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மீண்டும் இணைந்து விடீர்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement