விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 3 வது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானபல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த சீசனில் ராசிகளுக்கு பரிட்சயமில்லாத சில போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தர்சனும் ஒருவர். அது போக கடந்த சில வரமாக தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி பஞ்சாயத்து தான் வைரலாக போய் கொண்டு இருக்கிறது.
தர்ஷனுக்கு சனம் ஷெட்டி என்ற காதலி இருக்கிறார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் சென்ற சில நாட்களிலேயே தெரியவந்தது. தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.
இதையும் பாருங்க : 100 குழந்தைகளை சிறப்பு விமானத்தில் வானில் பறக்க வைக்கப்போகும் சூர்யா. குவியும் வாழ்த்துக்கள்.
இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சனம் ஷெட்டிக்கும் தர்ஷனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது. ஆனால், தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சனம் ஷெட்டி வேறு ஒரு நடிகருடன் பாடலொன்றில் லிப் லாக் முத்தக்காட்சிகளில் நடித்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற தர்ஷன், சனம் ஷெட்டி பிகினி உடையில் பேட்டி கொடுத்தது தான் பிரச்சனை என்பது போல கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் சனம் செட்டி எக்கச்சக்க முத்த காட்சிகளில் நடித்திருக்கிறார். ஒருவேளை தர்ஷன் இந்த வீடியோவை கண்ட பிறகு இதற்கும் ஒரு சண்டை போட்டிருப்பார்களோ என்ற ஒரு எண்ணமும் எழத்தான் செய்கிறது