சனம் ஷெட்டி சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் தர்ஷனுக்கு பிக்பாஸ் மூலம் கிடைத்த பரிசு.

0
2402
tharshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல்வேறு நபர்கள் பங்கு பெற்றார்கள் குறிப்பாக லாஸ்லியா தர்ஷன் முகென் என்று ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத முகங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலமடைந்துள்ளார்கள். இதில் இலங்கையை சேர்ந்த தர்ஷனும் ஒருவர். இலங்கை மாடல் அழகனான தர்ஷன் பிக் பாஸுக்கு முன்னதாக ஒரு சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால், இவருக்கு மாபெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 3 பட்டத்தை தர்ஷன் தான் வெல்வார் என்று போட்டியாளர்களும் சரி ரசிகர்களும் சரி அனைவருமே எதிர் பார்த்து வந்த நிலையில், இறுதி வாரத்தில் தர்ஷன் வெளியேறினார். இருப்பினும் தனக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு இருந்து வந்தது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின்போது கமல் அவர்கள் தர்ஷன், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபராக மாறி விட்டார் என்று கூறியிருந்தார்.

இதனால் எதிர்காலத்தில் வரும் கமல் படத்தில் தர்ஷன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தர்ஷன் ரசிகர்களின் பேராதரவு இருந்து வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்னால் சனம் ஷெட்டி விவகாரத்தால் தர்ஷனின் பெயர் முழுவதும் டேமேஜ் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே தர்ஷனுக்கு சனம் ஷெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது .ஆனால்,அதனை தர்ஷன் மறைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை அதிகரிக்க தற்போது இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

தர்ஷன் மீது சனம் ஷெட்டி பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த பிரச்சினை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தர்ஷனுக்கு ஒரு பரிசு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது போட்டியாளர்களுக்கு யமஹா பைக்கை வைத்து போட்டோ ஷூட் நடத்தி இருந்தனர். இந்த போட்டோ சூட்டின் போது முதல் பரிசை வென்ற தர்ஷனுக்கு யமஹா பைக் ஒன்று பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது இத்தனை மாதங்கள் கழித்து அந்த பரிசுக்கு வந்து சேர்ந்துள்ளது அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement