சனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு சிம்பு செய்த விஷயம். தர்ஷன் கூட இத பண்ணல.

0
16947
shanam-shetty
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 3 வது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானபல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த சீசனில் ராசிகளுக்கு பரிட்சயமில்லாத சில போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், இவருக்கு ப்ளேபாய் என்றும் தமிழ் சினிமாவில் ஒரு செல்லப் பெயரும் இருக்கிறது. நயன்தாரா தொடங்கி ஹன்சிகா பல்வேறு காதல் கிசுகிசுக்களில் சிக்கி உள்ளார். அதேபோல சிம்பு நண்பர்களுடனும் அடிக்கடிபார்ட்டிக்கு செல்வது வழக்கம். மேலும், இவர் கடந்த பிக் பாஸ் சீசனின்போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வைரலாக பரவியது. சிம்புவிற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒரு இணை பிரியாத பந்தம் இருந்து கொண்டுதான் வருகிறது.

இதையும் பாருங்க : பொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் சென்று அனைவரையும் சுண்டி இழுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.

- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மகத், நடிகர் சிம்புவின் மிகவும் நெருங்கிய நண்பர். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த மகத்தை நடிகர் சிம்பு நேரில் சென்று சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் மகத்திற்கு நண்பர்களாக இருந்து வந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா உடனும் நடிகர் சிம்பு நட்பு பாராட்டி வந்து கொண்டிருக்கிறார்.

Image result for sanam shetty simbu"

இவர்கள் அனைவரும் இணைந்து அடிக்கடி பார்ட்டி என்று செல்வதும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும், சிம்பு, படத்தில் ஐஸ்வர்யா நடிக்க உள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனை நடிகர் சிம்புதான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற ஒரு செய்தியும் சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், அடுத்த சீசனிலும் கமல்தான் மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றப் போகிறார் என்று தொலைக்காட்சி தரப்பிலிருந்து அதன் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ள தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியுடன் நடிகர் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் சனம் ஷெட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்கு நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் சமீபத்தில் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காதலரே பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதா நிலையில் சிம்பு சனம் ஷெட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement