சின்னத்திரை சீரியலில் நடிக்கும் பல்வேறு நடிகைகள் தற்போது இளசுகள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சரண்யாவும் ஒருவர். சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அப்படி எதிர்பார்த்ததை விடவும் அமோக வெற்றிபெற்ற சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடர் தான்.
வித்யாசமான தொடர்களை ஒளிபரப்பி வரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த சீரியலில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரண்யா ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது சன் தொலைக்காட்சியில் ரன் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் 5 வருடங்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் பிரகாஷாக நடித்திருந்தார் கிருஷ்ணா. கடந்த ஆண்டு நிறைவடைந்த இந்த தொடருக்கு பின்னர் பிரகாஷ் வேறு எந்த சீரியலில் நடிக்கவில்லை. இந்த நிலையில் சன் டிவிக்காக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ரன் என்ற மெகா சீரியல் ஒன்றை இயக்கி வருகிறார் செல்வா.
இவர் ஏற்கனவே ‘சித்தரப்பாவை’,‘நீலா மாலா’ உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை 27 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ரன் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார். இந்த தொடரில் பிரகாஷுக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் நடித்த சரண்யா நடித்து வருகிறார். ஆனால், நெஞ்சம் மறப்பதில்லை போன்று இந்த தொடர் வெற்றியடையவில்லை.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். இவர் பதிவிடும் புகைப்படங்கள் ஆயிர கணக்கில் லைக்ஸ்களை குவித்து விடுகிறது. சமீபத்தில் நடிகை சரண்யா பொது நிகழ்ச்சிக்கு ஒளி ஊடுருவும் ஆடையில் சென்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.