பிக் பாஸிற்கு முன்பே எனக்கும் தர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்தது. ஆதாரத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி.

0
17080
tharshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் முகேன் முதல் பரிசையும் சாண்டி இரண்டாவது பரிசையும் தட்டிச் சென்றார்கள். ஆனால், இந்த சீசனில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று சக போட்டியாளர்கள் சரி, ரசிகர்களும் சரி மிகவும் ஆணித்தரமாக நம்பி வந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதிப் போட்டியில் இரண்டு வாரத்திற்கு முன்பாக தர்ஷன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் சென்ற தர்ஷன் ஷெரினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் தர்ஷன் மற்றும் ஷெரின் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் அடிக்கடி சனம் ஷெட்டி அழுதபடி வீடீயோவை பதிவிட்டு தர்ஷன் மற்றும் ஷெரீனை குறை கூறி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இனி தம்மால் தர்ஷனுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது அதனால் நான் தர்ஷனிடம் இருந்து விலகி கொள்கிறேன் என்று அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய வனிதாவை போல மாறிய வனிதா. வைரலாகும் புகைப்படம்.

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.இந்த நிலையில் சனம் ஷெட்டி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சனம் ஷெட்டி, எனக்கும் பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனுக்கும் மே 12 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்தம் ஆனது. மேலும், எங்கள் திருமணமும் ஜூன் 10 ஆம் தேதி 2019 ஆண்டு ஏற்பாடு செய்து இருந்தோம். திருமண நேரத்தில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

திருமணம் செய்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்றால் எனக்கு பெண் ரசிகைகள் கம்மி ஆகிவிடுவார்கள் என்றார். நீயும் நம் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் அப்படி சொன்னால் என்னுடைய பிரபலம் குறைந்துவிடும் என்று என்னிடம் சத்தியம் வாங்கினார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விசா, விமான டிக்கட் என்று 15 லட்சம் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன் என்னை அவர் அவமானாமாக பேசி என்னை நிராகரித்தார் என்று கூறினார் என்று கூறியுள்ள சனம் ஷெட்டி என்னை தர்ஷன் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக தர்ஷன் ஏமாற்றி விட்டதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளாராம்.

Advertisement