வனிதாவை கேள்வி கேட்க ட்விட்டர் கணக்கை துவங்கிய சனம்.! டீவீட்டை டெலீட் செய்து விட்டு எஸ்கேப் ஆன வனிதா.!

0
28031
vanitha-sanam
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் வெற்றியாளர்கள் யார் என்று முடிவாக இருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் கவின். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் வனிதா, இன்று நாள் முழுக்க கவின் பற்றியும் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி குறித்தும் பொய்யா தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார் வனிதா.

-விளம்பரம்-

சனம் ஷெட்டி குறித்தும் தர்ஷன் குறித்தும் பதிவிட்ட வனிதா , தர்ஷன் ஷெரினிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டு அவரது காதலி சனம் வெட்டி மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டதாகவும், அது தெரிந்தும் கூட தர்ஷன் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்றும் வனிதா பொய்யான தகவலை பேசி வருகிறார் என்றும் நான் ட்விட்டரில் கூட இல்லை அப்படியிருக்க வனிதா எதற்கு இவ்வாறு பொய்களைக் கூறி வருகிறார். வனிதா என்னுடைய பெயரை பயன்படுத்தி தர்ஷனை டார்கெட் செய்கிறார் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் ஆரம்பத்திலும் தற்போதும் லாஸ் மற்றும் ஷெரினுக்கு ஏற்பட்ட மாற்றம்.! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

இந்த நிலையில் வனிதாவை கேள்வி கேட்க வேண்டும் எனதற்காவே ட்விட்டரில் கணக்கை ஆரம்பித்த சனம் ஷெட்டி, வனிதா, இது சனம் ஷெட்டி. உங்களிடம் ஒன்றை தெளிவு படுத்தவே நான் ட்விட்டர் கணக்கை துவங்கியுள்ளேன். நான் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை அணுகியதாக நீங்கள் கூறி இருந்தீர்கள் அது உண்மை கிடையாது. ஒருவேளை சாக்க்ஷி தான் இதனை கூறியுள்ளார் என்று நீங்கள் சொன்னால் நான் அவரிடமும் இதைப்பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று வனிதாவை கேள்வி கேட்டுள்ளார். இதனால் வனிதா அந்த டீவீட்டை நீக்கியுள்ளார்.

மேலும், இனி பிக்பாஸ் குறித்த எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தான் விரும்பவில்லை என்றும் இது ஒரு கேம் ஷோ தான் அதற்கு ஏன் அனைவரும் தலையை உள்ளே நுழைத்து கொண்டு இவ்வளவு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், இனி யார் எப்படி போனால் எனக்கு என்ன என்னுடைய வாழ்க்கை பொய்யானது இல்லை என்று பதிவிட்டுள்ளார் வனிதா.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement