பிக் பாஸ் ஆரம்பத்திலும் தற்போதும் லாஸ் மற்றும் ஷெரினுக்கு ஏற்பட்ட மாற்றம்.! வைரலாகும் புகைப்படம்.!

0
33938
sherin-losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு ஏற்படும் மாற்றத்தை பற்றி நாம் பலமுறை கண்கூடாக கண்டுள்ளோம். அந்தவகையில் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி முதல் கடந்த சீசனில் கலந்துகொண்ட பாலாஜி மனைவி நித்யா வரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் அவர்களது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

-விளம்பரம்-

அந்தவகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீஸனில் பங்கு பெற்றுள்ள ஷெரின் மற்றும் லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் தற்போதும் எப்படி மாறியுள்ளார்கள் என்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வந்த ஷெரின் பட வாய்ப்புகள் இல்லாததால் இடையில் பருமனாக மாறியிருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.! நேராக எங்கு சென்றார் தெரியுமா ?

- Advertisement -

மேலும், இவரை பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷேரினை கண்ட ரசிகர்கள் பலரும் துள்ளுவதோ இளமை படத்தில் இளமை பொங்க இருந்த ஷெரினா இது என்று மிகவும் அதிர்ச்சியாகினர். இதற்கு முக்கிய காரணமே அம்மணி அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் பருமனாக இருந்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி இத்தனை நாட்கள் கடந்த நிலையில் தற்போது ஷெரின் மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.

இவருக்கு நேர் எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கொஞ்சம் ஒல்லியாக இருந்த லாஸ்லியா தற்போது உடல் எடை கூடி மிகவும் பப்ளிக் தோற்றத்தில் மாறி இருக்கிறார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பெருத்து குட்டியாக இருந்த ஷெரின் தற்போது சிக்கனை சிறுத்த குட்டியாக மாறி உள்ளார் என்றும், பிக் பாஸ் ஆரம்பத்தில் சிறுத்த குட்டியாக இருந்த லாஸ்லியா தற்போது பெருத்த குட்டியாக மாறி உள்ளார் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement