பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்றபிறகு மீராதான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வரும் போட்டியாளராக இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணமே இவர் கூறும் பொய்களும் அடிக்கடி இவர் வடிக்கும் போலியான கண்ணீரும் தான். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக மீரா அப்பட்டமாக பொய் சொல்லி இருந்தார். இதனால் கடுப்பான தர்ஷன் நான் இப்போது உன்னிடம் கூறினேன். எனக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று கமல் முன்பே மிகவும் கோபத்துடன் மீராவை கத்தினார்.
ஆனால், அதற்குப் பின்னர்தான் தெரிந்தது மீரான் மீதும்தான் தரிசனை பிடிக்கும் என்று கூறியதாகவும் இதனால் தரிசனை தனது வீட்டிற்கு வந்து தனது அம்மாவிடம் பேச மாறும் கூறியிருந்தார் மீரா, இப்படி தர்ஷன் மீது அபாண்டமாக வழி சொன்னதை அடுத்து தர்ஷனின் காதலியான சனம்ஷெட்டி மீரா மிதுன் மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகிறார்.
இதையும் பாருங்க : ஸ்மோக்கிங் அறையால் பிக் பாஸ்ஸிற்கு வந்த புதிய சர்ச்சை.! கமலுக்கும் நோட்டீஸ்.!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தர்ஷனுக்கு காதலி இருப்பதே ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் தர்ஷனின் காதலி யார் என்பது தெரிய வந்துள்ளது. தர்ஹஸினின் காதலியின் பெயர் ஷணம் ஷெட்டி, அவரும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.
இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது காதலர் தர்ஷனை பிரிந்து 22 நாட்கள் ஆகிவிட்டது என்பதை குறிப்பிட்டு சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவின் முடிவில் என்றஹேஷ் #Getout Meera டேக்கையும் கையும் குறிப்பிட்டுள்ளார் சனம் ஷெட்டி இதன் மூலம் சனம் ஷெட்டிக்கு மீரா மிதுன் மீது எந்த அளவிற்கு கோபம் இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது