நானும் அவரும் அத பண்ணாததுதால இந்த நிலமை- பாலாஜி கருத்துக்கு சல்யூட் செய்த ஆரி.

0
2750
bala

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. கடந்த மூன்று தினங்களில் Ticket To Finale கான ஏழு டாஸ்குகள் நிறைவடைந்து உள்ளது.

- Advertisement -

இந்த ஆறு டாஸ்கின் முடிவின் படி ரியோ மற்றும் சோம் சேகர் தலா 32 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக 30 புள்ளிகளுடன் பாலாஜி இரண்டாம் இடத்திலும் 28 புள்ளிகளுடன் ரம்யா மற்றும் ஷிவானி மூன்றாம் இடத்திலும், 24 புள்ளிகளுடன் ஆரி நான்காம் இடத்திலும், 22 புள்ளிகளுடன் கேப்ரில்லா கடைசி இடத்திலும் இருக்கின்றனர். Ticket To Finale டாஸ்க் என்றால் பெரும்பாலும் பிஸிக்கல் டாஸ்க்காக தான் இருக்கும். ஆனால், இந்த சீசனில் பெரும்பாலும் விவாதம் அடிப்படையில் தான் டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கூட எட்டாவது டாஸ்க்காக போட்டியாளர்கள் அனைவரும் ஒரு வாக்கியத்தை தேர்வு செய்து, அந்த வாக்கியம் யாருக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை கூற வேண்டும். நேற்று நடைபெற்ற இந்த டாஸ்க் பாதியில் முடிவடைந்த நிலையில் இன்று அந்த டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதில் ஆரி, பாலாவிற்கு நிறைய எதிர்மறை கருத்துக்கள் வர இதனை சுட்டிக்காட்டி உள்ளார் பாலாஜி. இதற்கு ஆரியும் சல்யூட் அடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement