நேற்று நடந்து முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க் முடிவில் முதல் மற்றும் இறுதி இடத்தில் இருப்பது யார் தெரியுமா.!

0
13758
bigg-boss
- Advertisement -

கோல்டன் டிக்கெட்டுக்கான 2 டாஸ்குகள் நேற்று கொடுக்கப்பட்டது. இதில் முதல் டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்களது காலில் பலுனை கட்டிக்கொள்ள வேண்டு அதை யாரும் உடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல மற்ற போட்டியார்களின் பலூனை உடைக்க வேண்டும். இந்த போட்டியில் யாருடைய பலூன் முதலில் உடைகிறதோ அவருக்கு 1 மதிப்பெண்களும் இறுதியில் யாருடைய பலூன் உடைகிறதோ அவருக்கு 7 மதிப்பெண்களும் அளிக்கபட இருந்தது.

-விளம்பரம்-

இந்த டாஸ்கின் இறுதியில், முதல் ஆளாக கவின் வெளியேற இறுதியாக தர்ஷன் வெற்றி பெற்றார். எனவே, இந்த முதல் டாஸ்க் முடிவில் தர்ஷன் -7, சாண்டி -6, சேரன் – 5, லாஸ்லியா – 4, ஷெரின் – 3, முகென் – 2, கவின் – 1 என்ற வீதம் பெற்றிருந்தனர்.

இதையும் பாருங்க : சாண்டி- காஜலுக்கு இரண்டு குழந்தை இருக்கிறதா ? அவரிடம் நான் பல முறை சொன்னேன் என்று புலம்பிய காஜல்.!

- Advertisement -

இந்த டாஸ்க்கிற்கு பின்னர் கொடுக்கப்பட்ட அடுத்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் யார் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்று போட்டியாளர்களை வரிசை படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் 1 இடத்தில் இருப்பவர்களுக்கு 7 மதிபெண்க்ளும், 7 வது இடத்தை பெரும் நபருக்கு 1 மதிப்பெண்களும் அளிக்கப்பட இருந்தது.

அந்த வகையில் இந்த இரண்டாவது டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் கொடுத்த வரிசையின்படி தர்ஷன் – 41, சாண்டி – 33,முகென்- 31, சேரன் -29, ஷெரின் -24, லாஸ்லியா – 21 கவின் – 14 என்று மதிப்பெண்கள் பெற்றனர். எனவே, நேற்று நடந்து முடிந்த இந்த இரண்டு டாஸ்கின் இறுதியில் யார் எவ்வளவு மதிப்பெண்களை பெற்று எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்,

-விளம்பரம்-
  1. தர்ஷன் – 41+7 = 48
  2. சாண்டி – 33+6 = 39
  3. சேரன் – 29+5 = 34
  4. முகென் – 31 +2 = 33
  5. ஷெரின் – 24 + 3 = 27
  6. லாஸ்லியா – 21 + 4= 25
  7. கவின் – 14+1= 15

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement