அபிராமியை தொடர்ந்து பிக் பாஸில் இருந்து வெளியேறிய நபர் – ஐயோ இவரா ? ஏற்க மறுக்கும் நெட்டிசன்கள்.

0
598
julie
- Advertisement -

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இதில் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு தாமாகவே வெளியேறி இருந்தார். அதே போல நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த சுரேஷ் சக்ரவர்த்தியும் உடல் நல பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் இறுதி நாமினேஷன் என்பதால் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் பல தனியார் சமூக வலைதள பக்கத்தில் நடைபெற்று வந்த வாக்கெடுப்புகளில் அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அனைவரும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று அபிராமி திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

இதையும் பாருங்க : bathroom போக வீல் சேரை தள்ளவே கஷ்டப்பட்ட ரம்யா, பார்த்தும் பார்க்காதது போல சாப்பிட்டு கொண்டு இருந்த தாமரை. ச்ச பாகுவே பாவமா இருக்கு இந்த வீடியோ.

- Advertisement -

வெளியேற்றப்பட்ட ஜூலி :

இதனால் பாலாஜி, ஜூலி, ரம்யா பாண்டியன், நிரூப், தாமரை ஆகிய 5 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இப்படி ஒரு நிலையில் அபிராமியை தொடர்ந்து மற்றொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக ஷாக்கிங் தங்கள் வெளியாகி இருக்கிறது. அது வேறு யாரும் இல்லை ஜூலி தான்.

முதல் சீசனில் கெட்ட பெயர் :

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவலை நடிகையும் முன்னாள் நிக் பாஸ் போட்டியாளருமான பாத்திமா பாபுவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலி பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டார். ஆனால், அந்த சீசனில் இவரது பெயர் கடுமையாக டேமேஜ் ஆனது.

-விளம்பரம்-

அல்டிமேட்டில் சம்பாதித்த பெயர் :

அதிலும் குறிப்பாக ஜூலி அந்த சீசனில் ஓவியாவுடன் அடிக்கடி பிரச்சனை செய்ததாலேயே இவரது பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த போதிலும் இவர் சமுக வலைதள பக்கத்தில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். கிட்டதட்ட 5 ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் பல விதமாக நெகடிவ் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த ஜூலி மீண்டும் பிக் பாஸில் கலந்துகொண்ட போது பெரும் கேலிக்கு உள்ளாகினார்.

ரசிகர்கள் ஏமாற்றம் :

ஆனால், தன் பெயரை சரி செய்துகொள்ளவும் உண்மையில் தான் யார் என்பதை மக்களுக்கு எடுத்துகாட்டவும் தான் பிக் பாஸுக்கு வந்ததாக சொன்னார் ஜூலி. அதே போல பிக் பாஸ் அல்டிமேட் மூலம் தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்தார். ஜூலி கண்டிப்பாக டாப் 3 இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து இருக்கிறது.

Advertisement