திடீரென வெளியேறும் கமல்? பிக் பாஸ் அல்டிமேட்டில் அடுத்த வார தொகுப்பாளர் யார் ? 

0
527
kamal
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் தான் முதன் முதலாக இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. அதுமட்டும் இல்லாமல் ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது விஜய் டிவி புது வித்தியாசமான கதைக்களத்துடன் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-

இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா தாக்கி கொளுத்தி போட்டு வருகிறார். அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாவது வாரம் எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எலிமினேட்:

தற்போது இந்த மூன்றாவது வாரத்திற்கான நாமினேட் டாஸ்க் நடந்தது. அதில் இரண்டு எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வாரம் ஷாரிக் மற்றும் சினேகன் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடவில்லை என பிக்பாஸில் இருந்து அறிவித்து இருந்தார்கள். இதே கருத்தை தான் நெட்டிசன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது கமலஹாசன் இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேற்றம்:

இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐந்து வருடங்களாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரத்துடன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறுகிறார் என்று கூறுகிறார்கள். அடுத்த வாரத்தில் தொகுப்பாளராக யார் இருப்பார் என்று விவாதம் நடந்து வருகிறது.

அடுத்த தொகுப்பாளர் பற்றிய கேள்வி:

அதுமட்டுமில்லாமல் கமல் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். ஒருவேளை ரம்யா கிருஷ்ணன் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு வருவாரோ? என்று கேள்வி கேட்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து ஏன் வெளியேறுகிறார்? என்ன காரணம் என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதற்கு கமலஹாசன் மற்றும் பிக்பாஸ் குழு தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement