கமலுக்கு பதில் வந்த அடுத்த Host, இவருன்னு தெரிஞ்சி இருந்தா வனிதா போய்யிருக்க மாட்டாங்களோ.

0
443
kamal
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக சிம்பு வந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் தான் முதன் முதலாக இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. அதுமட்டும் இல்லாமல் ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது விஜய் டிவி புது வித்தியாசமான கதைக்களத்துடன் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா, ஷாரிக், அபிநய் என்று 4 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

- Advertisement -

வெளியேறிய கமல் :

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து தமாகவே வெளியேறினார். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாக கடந்த ஞாயிற்று கிழமை அறிவித்து இருந்தார் கமல். இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர்.

விக்ரம் படத்தால் ஏற்பட்ட நெருக்கடி :

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்’கோவிட் பெருந்தொற்று பரவலும் அதனை அடுத்து வந்த லாக்டவுன் விதிமுறைகளும் ஒவ்வொருவரின் மனதிலும் திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த நான் விரும்பி செய்கிற ஒன்று. விக்ரம் பணிகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

-விளம்பரம்-

கமலுக்கு பதில் அடிபட்ட பெயர்கள் :

மேலும், இது தற்காலிக முடிவு தான் என்றும் சீசன் 6ல் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறி இருந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் கமளுக்கு பதில் இனி யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. மேலும், இதில் ரம்யா கிருஷ்ணன், அரவிந்த் சாமி, அர்ஜுன் போன்ற பெயர்கள் அடிபட்டது. அதே போல கடந்த சீசனில் கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த போது இரண்டு நாட்கள் மட்டும் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

எனவே, இந்த சீசனை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டில் கமலுக்கு பதில் தற்போது சிம்பு வந்துள்ளார். வனிதா வெளியேற முக்கிய காரணமே ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவார் என்ற பயத்தில் தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சிம்பு வந்து இருக்கிறார். இதனால் அவர் நிச்சயம் கொஞ்சம் அவசர பட்டுவிட்டோமோ என்று புலம்பிகொண்டு இருப்பார்.

Advertisement