பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து இதனால் தான் வெளியேறினேன். முதல் முறையாக மனம் திறந்த வனிதா. வைரலாகும் பதிவு.

0
575
vanitha
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய வனிதா முதல் பதிவை போட்டுள்ளார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி இருந்தார். இதுகுறித்து தெரிவித்த அவர், நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக மட்டும் தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார். பின் இன்று வனிதா மிகவும் மனமுடைந்து கண்பெக்ஷன் ரூமில் பிக்பாஸ் இடம் பேசி இருக்கிறார். அப்போது அவர், என்னை வீட்டில் உள்ள எல்லோரும் டார்கெட் செய்கிறார்கள்.அவர்களிடம் சண்டை போட எனக்கு விருப்பம் இல்லை. அவர்களுடன் சண்டை போட்டு நான் என்னுடைய தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-107.jpg

எல்லோருமே ஒரு பக்கமிருந்து என்னை மட்டும் டார்கெட் செய்து தாக்குற மாதிரி எனக்கு தெரிகிறது. எனக்கு இங்க இருக்க பிடிக்கவில்லை. என்னை தயவு செய்து வெளியில் அனுப்பி விடுங்கள் என்று அழுது புலம்பி இருந்தார். அவரை எவ்வளவோ சமாதானம் செய்தும் ஒப்பபுக்கொள்ளவில்லை என்பதால் வனிதாவை வெளியேற்றினர். பிக் பாஸில் இருந்து வனிதா வெளியேற முக்கிய காரணமே இனி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கப்போகிறார் என்பதால் தான் என்று கூறப்பட்டது.

- Advertisement -

வெளியேறிய வனிதா ;

மேலும், வனிதாவுக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் போது வாக்குவாதம் ஏற்பட்டு வனிதா நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார். தற்போது ரம்யா கிருஷ்ணன் தான் தொகுப்பாளராக வர வாய்ப்பிருக்கும் காரணத்தினால் தான் வனிதா இந்த மாதிரி எல்லாம் பேசுகிறாரா? இதனால் தான் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுங்கள் என்று கேட்கிறாரா? என்று சோசியல் மீடியாவில் என்று ரசிகர்கள் பேசி வந்தனர்.

This image has an empty alt attribute; its file name is 1-85.jpg

அதே போல கடந்த சீசனில் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது ரம்யா கிருஷ்ணன் தான் தற்காலிகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். எனவே, கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கப்போகிறார் என்பது உறுதியாகி இருப்பதால் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்று சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. ஆனால், தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு தான் வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

வனிதா கொடுத்த விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் வனிதா தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியேற்றத்திற்கான காரணத்தை பதிவிட்டுள்ளார். அதில், நான் வெளியேறியதை ரம்யாகிருஷ்ணானுடன் இணைக்கும் அந்த முட்டாள்தனமான வதந்தி பரப்புபவர்களுக்கு , நான் சுய மரியாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நான் மன உளைச்சலுக்கு ஆளானேன், மேலும், என்னால் குழப்பத்தைத் தாங்க முடியவில்லை. துணிச்சலான முடிவெடுக்கும் அளவுக்கு தைரியமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்தேன்.

ரம்யா கிருஷ்ணன் தான் காரணமா ?:

என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு என்னுடன் ஒத்துழைப்பதற்காக எண்டெமால் மற்றும் டிஸ்னிக்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். வாழ்க்கை உங்களுக்கு சாய்ஸ் தருகிறது, மேலும் உங்களுக்கு எது செட் ஆகும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்.. நான் எப்போதும் வலுவான முடிவுகளை எடுத்திருக்கிறேன், நான் ஒருபோதும் மனந்திரும்பவில்லை, ஏனென்றால் எனக்கு என்ன வேண்டும், என் மதிப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். சில்லித்தனமான விளையாட்டுகள், இதை குழந்தைகள் இந்த ட்ராமாவை என்ஜாய் செய்யட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement