கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் Bigg Boss Unseen Video, மிட் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று பல விடீயோக்களை ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பினர். ஆனால், அது போல இந்த முறை அது போன்ற எந்த விடீயோவையும் ஹாட் ஸ்டாரரில் ஒளிபரப்ப துவங்காமல் இருந்தது.
அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரத்திற்கு மேலாக ஒளிபரப்பபட்டது. ஆனால், இம்முறை வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆனால், மறுநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது.
தொலைக்காட்சியை போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் அனைவரும் பார்ப்பது கிடையாது. எனவே, ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லது அணைத்து காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருப்பினும் தற்போது ஹாட் ஸ்டாரில் unseen வீடியோ மட்டும் சிறிது நேரம் ஒளிபரப்பபட்டு வருகிறது. இருப்பினும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரில் மறுநாள் ஒளிபரப்பபடுகிறது. அந்த வகையில் நேற்றய எபிசோடில் நீக்கபட்ட காட்சிகள் இவை. இந்த வீடியோவில் மோகன் வைத்யா என்னவெல்லாம் காமெடிய பண்ணியுள்ளார் என்று பாருங்கள்.