பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பெரும் புகழையும் ஏற்படுத்தி தந்துள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பார்வையாளர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு பின்னர் தனது பெயரை படு டேமேஜ் செய்து கொண்டவர் வைஷ்ணவி தான்.
பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்துவந்தார் . அஞ்சான், விமான ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி.மேலும் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டார் வைஷ்ணவி.
மேலும், கடந்த சில காலமாக தன்னிடம் யாராவது வம்பாக பேசினால் அவர்களை பிளாக் செய்து விடுவேன் என்று கூறிவந்தார். இந்த நிலையில் வைஷ்ணவிக்கு மோசமாக மெசேஜ் அனுப்பிய நம்பரை வைஷ்ணவி பிளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி.