தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகம் முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை வைத்திருக்கிறார்கள். ஜெயராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரி ஜெயராஜ் இடம் விசாரித்து உள்ளார். அப்போது காவல்துறையினருக்கும், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கி உள்ளனர்.
காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனால், இருவருமே சிகிக்சை பலனின்றி அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தந்தை, மகன் மரணத்திற்கு பலரும் சோசியல் மீடியாவில் போலீசை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி அவர்கள் போலீசால் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, ஒருமுறை வைஷ்ணவி அவர்கள் சில நபர்களால் தொல்லை இருப்பதாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றார். அதற்கு காவல்துறை அதிகாரிகள் நீங்கள் செய்யும் தொழிலில் இந்த மாதிரி பிரச்சினைகள் இருப்பது சகஜம் தான். நீங்கள் தான் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற பிரச்சினை குறித்து புகார் கொடுக்காதீர்கள் என்று அலட்சியப்படுத்தி விட்டார்கள். இன்னொரு முறை வைஷ்ணவி அவர்கள் தன்னுடைய நாய்க்கு நாய் பிடிப்பவர்களால் பிரச்சனை வந்தது என்றும், அதனால் தன் நாய் மிகவும் மோசமாக பாதிக்கபட்டு உள்ளதாகவும் புகார் அளித்தார். அதற்கு போலீஸ் கிண்டலும் கேலியும் செய்து ப்ளு கிராசில் புகார் அளியுங்கள் என்று கூறி அவரை அனுப்பி விட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் நான் மோட்டார் பைக்கில் பயணம் செய்யும்போதும் போலீஸ் நிறுத்தி என்னை மனரீதியாக கருத்துக்களையும் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதை விட மிகக் கொடூரமான நிகழ்வும் நடந்துள்ளது. அது என்னவென்றால் இரவு 8 மணி அளவில் வைஷ்ணவி சாலையில் நின்றிருந்த போது அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் நடந்தது. இது குறித்து புகார் அளித்ததற்கு போலீஸ் அலட்சியப்படுத்தி புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த மாதிரி பலமுறை வைஷ்னவி புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. காவல்துறை எப்படி மக்களின் நண்பராக இருக்க முடியும் என்று கேள்வி கூறியிருக்கிறார். இப்படி 4 முறை போலீசில் புகார் அளித்தும் எந்த பயன் இல்லை என்று வைஷ்ணவி போட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.