பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதா மகளுக்கு ஏற்பட்ட நிலை.. இப்படி எல்லாம் யாருக்கும் நடக்க கூடாது..

0
20257
vanitha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அன்பும்,ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் வனிதா விஜயகுமார். இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவர். வனிதா தமிழில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற படத்தில் தான் அறிமுகமானார்.பின்னர் திரைப்படத் தயாரிப்பாளருமானர். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அதிகளவு பிரபலமாவதற்கு முக்கிய காரணம் வனிதா.மேலும்,பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே வனிதாவினால் பயங்கர பிரச்சனைகள், சர்ச்சைகள் தோன்றினார்.இதனால்,மக்கள் வனிதாவை வெறுக்கவும் ஆரம்பித்தார்கள்.வனிதா குறித்து பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

-விளம்பரம்-
Image result for vanitha daughter

அதோடு பிக் பாஸ் சீசன் 3 இன் வில்லி ஆகவே வனிதா அவதாரம் எடுத்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலுமினேட் செய்யப்பட்டார். மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பும் தந்தார்கள். பின்னர் அவரிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டது. எப்படி விளையாட வேண்டும் என்று வெளியே போய் பார்த்து விட்டு , நுணுக்கங்களை கற்றுக் கொண்டு விடையாடினார். மேலும், கமலஹாசன் அவரை நீங்கள் ஒரு சிறந்த “அன்னை” என்றும் பாராட்டி வந்தார்.அதோடு சில மாதங்களுக்கு முன்பு வனிதாவின் குடும்ப வாழ்க்கையிலும், அவருடைய பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் பயங்கர பிரச்சனை. சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்டு பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.இதனால்,கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வனிதா தன் மகனைப் பற்றி தான் அதிகம் பேசுவார். தன் மகன் தன்னுடன் இல்லாமல் பிரிந்து உள்ளார்என்றும் மீண்டும் அவன் என்னுடன் வந்து பேசுவான் என்ற நம்பிக்கை இருக்கு என்று அடிக்கடி சொல்லுவார். அவன் எங்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் என பலமுறை கூறி உள்ளார்.மேலும்,அவர் மகன் வரவுக்காக நாங்கள் காத்திருக்கும். வனிதா, ஜோத்விகா, ஜெயந்திகா என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.அது மட்டும் இல்லைங்க இந்த இரண்டு பெண்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து பயங்கர சேட்டை செய்தார்கள் கூட சொல்லலாம். அந்த வீட்டில் உள்ள அனைவரையும் குழந்தையாகவே மாற்றி விட்டார்கள்.

அந்த அளவிற்கு ஜாலியாக இருந்தார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் வனிதாவின் மூத்தமகள் ஜோத்விகா வயதுக்கு வந்தாள். இதனால் அவர் யாரையும் கூப்பிடாமல் ரகசியமாக சடங்கு நடத்தினார்.மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்த இந்த சேரன், லாஸ்லியா ,பாத்திமா பாபு மற்றும் தனது நெருக்கமான உறவினர்கள் மட்டும் அழைத்து சடங்கை நடத்தி முடித்தார். இப்படி தன் வாழ்க்கையில் பல கவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து போராடி வருகிறார் வனிதா. இதனால் வனிதா ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவரின் நிலையை கண்டு சோகத்தில் உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement