என் ஷோக்கு வர சொல்லுங்க, நான் சொல்லித்தறேன் – வெளுத்து வாங்கிய லஷ்மி ராமகிருஷ்ணன்.

0
5142
vanitha

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனத்தை கேட்டதும் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலக்கப்போவது யாரு ராமர் தான் ஆனால் இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் என்றால் அது லட்சுமி ராமகிருஷ்ணன் தான் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் நடிகை என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல்வேறு குடும்ப பிரச்சனைகளுக்கு நாட்டாமை செய்த இவர் சமீபத்தில் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து இருந்தார்.

கற்பழிப்பு மற்றும் தற்கொலை குறித்து பேசி உங்களின் உண்மையான கடமைகளைச் செய்யுங்கள் ஒரு குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் குடும்பத்தை பற்றி விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா உங்க வாய கொஞ்சம் மூடு மேடம் என்றும் பதிலளித்துள்ளார் வனிதா.

இதையும் பாருங்க : இரண்டாம் கணவருடன் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி மகள். என்ன விஷேஷம் தெரியுமா ?

- Advertisement -

இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து தான் பதிவிட்ட கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்று லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் வனிதாவிற்கும் உங்களுக்கும் என்ன சண்டை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர், வனிதா வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும். அனைவரும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

ஆனால் அவர் இதுவரை அந்த சந்தோஷத்தை சந்தித்தது கிடையாது. மேலும் நான் பதிவிட்ட கருத்து வனிதாவை எந்த ஒரு தனிப்பட்ட நோக்கத்துடன் குறிப்பிட்டு பதிவிடவில்லை. எனக்கும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை ஆனால், அவருக்கு ஆதரவாக பேசும் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மறுதிருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்றால் அதற்கு முறைப்படி விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். இதைப் பற்றி தெரியாத சில படிப்பறிவு இல்லாதவர்கள் என்னுடைய ஷோக்கு வாங்க நான் அவர்களுக்கு சட்ட திட்டத்தை பற்றி கூறி எப்படிமறு திருமணத்தை சட்டப்படி நடத்த வேண்டும் என்பதை கூறுகிறேன். படித்த சிலரே இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு நான் இதை தெரிவிக்க விரும்புகிறேன்.

-விளம்பரம்-

ஒரு திருமணமானது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றாலும், அவர் அதைப் பற்றி எப்போதும் வெளிப்படையாகவேபேசுகிறார். அவர் தனது மகிழ்ச்சியான தருணங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார், மேலும் இது குறித்து தைரியமாகவும் குரல் கொடுத்து வருகிறார். இதுவும் கவனிக்கப்பட வேண்டும் என்று நான் உணர்ந்தேன். என்னுடைய டீவீட்டில் இருந்து நான் பின்வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement