ஆமா, நான் குடிச்சேன் தான். முதன் முறையாக பேட்டி அளித்த பீட்டர் பவுல்.

0
5975
vanitha
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனக்கு விவாகரத்து கொடுக்காமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பீட்டரின் மனைவி எலிசபெத்.

-விளம்பரம்-

வனிதாவின் திருமண விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் பெரும்பாலானோர் கேட்கும் ஒரே கேள்வி இப்படி ஒரு பிரச்சனை இருக்கையில் பீட்டர் பவுல் ஏன் இன்னும் பேட்டிகளில் பங்கு பெறாமல் மௌனம் சாதித்து வருகிறார் என்பதுதான்.அதேபோல பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத், பீட்டர் பவுல் என்ன முத்தம் கொடுக்க மட்டும்தான் கேமரா முன் வருவாரா ? இவ்வளவு பிரச்சனை சென்றுகொண்டிருக்கிறது அவர் ஏன் இன்னும் அவர் ஒரு பேட்டிகளில் கூட கலந்து கொள்ளவில்லை.

- Advertisement -

எதற்கு எடுத்தாலும் வனிதா தான் முன்னால் வந்து நிற்கிறாள். இது எனக்கும் பீட்டர் பவுலுக்கும் இடையிலான பிரச்சனை இடையில் பேச இவள் யார் கணவன்-மனைவி பிரச்சினைகளை பேச இவர் யார் என்றெல்லாம் விளாசி இருந்தார். இந்த நிலையில் முதன் முறையாக பீட்டர் பவுல் பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர்,நான் எழிசபெத்துவுடன் இருந்தபோது ஒரு பிரச்சினையில் நான் இரண்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றேன்.

அப்போதுதான் எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அதேபோல பிரச்சனை தாங்காமல் நான் குடித்தேன் தான். அதற்காக நான் ஒன்னும் குடிக்கு அடிமை எல்லாம் கிடையாது அதேபோல நான் ஒன்னும் அவரை வேண்டாம் என்று சொல்லவில்லை நீ எனக்கு வேண்டாம் என்று அவர்தான் சொன்னார் என்று பல்வேறு ஷாக்கிங் தகவல்களை கூறியுள்ளார் பீட்டர் பவுல்.

-விளம்பரம்-
Advertisement