கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை அடுத்து வனிதா பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.
கவின் நடித்த நட்புனா என்ன தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், வனிதா மற்றும் பீட்டரின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறிய கருத்தின் சுருக்கம் என்னவென்றால் வனிதா யாரை திருமணம் செய்து கொள்கிறார் எந்த முறையில் திருமணம் செய்து கொள்கிறார் என்பது என்னுடைய கேள்வி கிடையாது. நானும் வனிதாவின் தீவிர ரசிகர் தான்.
ஆனால், ஒரு நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் விவாகரத்து பெறாமல் அந்த நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது சட்டரீதியாக தவறு. அதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.மேலும், வனிதா தனக்கு அனுப்பிய சில வாய்ஸ் மெசேஜ்களையும் காட்டினார் ரவீந்திரன். மேலும், ரவீந்திரனின் பேட்டிகளுக்கு வனிதாவும் பதில் அளித்திருந்தார்.
அதில், ரவீந்திரன் தேவையில்லாமல் எதற்கு இந்த விஷயத்தில் தலையிடுவது என்பது தெரியவில்லை அவருக்கும் எலிசபெத்தும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.மேலும், அவர் கவினை வைத்து 4 கோடிக்கு ஒரு படம் எடுத்ததாக சொல்லுகிறார். எனக்கு 4 கோடி எல்லாம் தேவை இல்லை, அவரால் எனக்கு ஒரு 40 ஆயிரத்தை கொடுக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். வனிதாவின் இந்த கேள்விக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீந்திரன் பதிலளிக்கையில் வனிதா கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு நான் 40 ஆயிரம் பணத்தை கொடுத்து விடுகிறேன். அதே போல அவர்களது இரண்டு மகள்களையும் படிக்க வைத்து அவர்களின் கல்யாண செலவையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ,இதை அனைத்தையும் வனிதா மீடியாவில் அமர்ந்து சொல்ல வேண்டும். மேலும், என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரவீந்திரன்