அந்த ஆசை நிறைவேறியதால் தான் நான் வனிதா பெயரை பச்சை குத்தினேன். ராபர்ட் மாஸ்டர் கொடுத்த ட்விஸ்ட்.

0
26607
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா திருமணம் குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வணிதாதாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-
robert

அந்த பேட்டியில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல் படம் குறித்து பேசிய ராபர்ட் மாஸ்டர்,, அந்த படத்திற்கு அவர்கள் மட்டும் மொத்த காசைக் போடவில்லை. நானும் என்னுடைய பணத்தை போட்டேன். ஆனால், எனக்கு ஹீரோ மற்றும் டைரக்டர் என்ற பெயரே போதும் எனவே நீங்களே தயாரிப்பாளராக போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதேபோல அவர்களுக்கு நான் பல உதவிகளை செய்து இருக்கிறேன் .அந்த படத்திற்கு பின்னர்தான் நான் அவருடைய பெயரை என் கையில் பச்சை குத்திக் கொண்டேன்.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பாவிற்கு நான் ஹீரோவாக வேண்டும் என்பது ரொம்ப ஆசை. அதை யாரும் நிறைவேற்றவில்லை. ஆனால், வனிதா அதை நிறைவேற்றினார். அதனால் ஒரு அன்பிற்காக தான் அவருடைய பெயரை என் கையில் டாட்டூ குத்திக் கொண்டேன். ஆனால், அந்த டாட்டூ குத்திய ஒரு மாதத்தில் அதன் புண் கூட மாறாமல் இருந்த நிலையில் பல பிரச்சனைகள் வந்ததால் அந்த டாட்டூவை நான் அழித்து விட்டேன்.

வீடியோவில் 4: 30 நிமிடத்தில் பார்க்கவும்

அதே போல அந்த பாடத்தின் போது என்னைக் கேட்காமலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் சென்று ஏன் இப்படி சொன்னீர்கள் என்று கேட்டதற்கு படத்துக்காகத்தான் மாஸ்டர் பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் என்று என்னிடம் சொன்னார் என்று கூறியுள்ளார் ராபர்ட் மாஸ்டர்.

-விளம்பரம்-
Advertisement