வனிதாவை வச்சி நான் பேமஸ் ஆவுறேனா. நானே இந்த நடிகையின் உறவினர் தான்- ஷாக் கொடுத்த சூர்யா அக்கா.

0
53433
vanitha

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

ஆரம்பத்தில் இது தனது திருமணம்தான் என்று கூறி வந்த வனிதா எலிசபெத்தின் புகாருக்கு பின்னர் இது திருமணம் கிடையாது வெறும் அன்பின் பரிமாற்றம் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்தார். இருப்பினும் தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா.ரசிகர்களை போலவே பல பிரபலங்களும் வனிதாவை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : சாத்தான்குளம் சம்பவம் . 20 மில்லியன் பேரால் பார்க்கப்பட்ட விடீயோவை நீக்கிய பாடகி சுசித்ரா.

- Advertisement -

அந்த வகையில் சூர்யா தேவி என்ற பெண் யூடுயூபில் அடிக்கடி வீடியோவை வெளியிட்டு வனிதாவை வெளுத்து வாங்கி வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோகளுக்கு பதிலடி கொடுத்த வனிதா, சூர்யா தேவிக்கு ஏதோ மனநல பிரச்சனை என்றும் கூறி இருந்தார். இருப்பினும் சூர்யா தேவி அடிக்கடி வனிதாவை வறுத்தெடுத்து வருகிறார். அதே போல இவர் வனிதாவை வைத்து பிரபலம் தேடுகிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

Folk singer-actress Paravai Muniyamma dies at 83 in Madurai - Movies News

இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா தேவி, வனிதாவை வைத்து பேமஸ் ஆக போறீங்களா என்று கேட்கிறார்கள். எனக்கு பறவை முனியம்மா ஒரு வகையில் எனக்கு உறவினர் தான். அவர்கள் என்னுடைய அம்மாச்சி தான். அவர் இறந்த போது நான் இங்கு இருந்தேன். நான் நினைத்தால் அவர் பெயரில் நான் யூடுயூப் சேனலை கூட ஆரம்பிக்க முடியும் என்று குறியுள்ளாள்.

-விளம்பரம்-
Advertisement